கோடீஸ்வரர்களால் மட்டுமே இந்த போர்ஷே காரை வாங்க முடியும்.. லாங் டிராவலின்போது சொகுசாக பயணிக்க ஏற்ற கார்!

போர்ஷே நிறுவனம் அதன் மசான் எலெக்ட்ரிக் கார் (Porsche Macan EV) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகள் இந்த காருக்கு தொடங்கி இருக்கின்றன. இந்த காரின் சிறப்புகள் என்ன? இதன் விலை எவ்வளவு? ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ தூரம் இதில் பயணிக்க முடியும்? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போர்ஷே (Porsche) இந்தியாவில் அதன் மசான் எலெக்ட்ரிக் கார் (Macan EV) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 1.65 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Porsche macan turbo ev front view

அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றன. இதன் டெலிவரி பணிகள் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்படும் என கூறப்படுகின்றது. இரண்டு விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். மசான் டர்போ மற்றும் மசான் 4 ஆகியவையே அவை ஆகும்.

மசான் 4 அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், மசான் டர்போ 639 எச்பி பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் மாடல் மசான தழுவி இந்த கார் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அளவில் சற்று பெரியதாகவே எலெக்ட்ரிக் வெர்ஷன் மசான் காட்சியளிக்கின்றது.

Porsche macan turbo ev

103 மிமீ நீளம், 15 மிமீ அகலம் மற்றும் 2 மிமீ குறைந்த தாழ்வான நிலையை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. இத்தகைய பெரிய உருவத்தைக் கொண்டிருப்பதனால் இந்த எலெக்ட்ரிக் கார் ஆடி க்யூ6 இ-ட்ரான்க்கு மிக சிறந்த போட்டியாக அமைந்திருக்கின்றது.

அளவில் வெரியதாக இருந்தாலும் டிசைன் விஷயத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மசான் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றன. காருக்குள் மூன்று விதமான திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 12.6 அங்குல வளைவான திரை, இது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராக செயல்படும். மற்றொன்று 10.9 அங்குலத்தில் உள்ளது.

Porsche macan turbo ev interior

இது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். மூன்றாவது 10.9 அங்கு தொடுதிரை சிஸ்டம் ஆகும். இதை பயணிகள் பயன்படுத்தும் விதமாக போர்ஷே வழங்கி இருக்கின்றது. வீடியோ உள்ளிட்ட பொழுதுபோக்குகளை இதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த காரின் பூட் ஸ்பேஸ் 540 லிட்டர் ஆகும்.

மேலும், முன் பக்கத்தில் ஓர் 84 லிட்டர் அளவில் ஸ்பேஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த காரில் போர்ஷேவின் ஆக்டீவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அட்வான்ஸ்டு ஏர் சஸ்பென்ஷன் செட்-அப் ஆகும்.

Porsche macan turbo ev rear

இத்துடன், எலெக்ட்ரானிக் டேம்பிங் கன்ட்ரோலும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே காருக்குள் பயணிக்கும்போது மிகவும் ஸ்மூத்தான மற்றும் அலுங்கல்-குலுங்கள் இல்லாத டிராவல் அனுபவத்தை வழங்கும். இரண்டு விதமான மோட்டார்களை போலவே பேட்டரி பேக்கிலும் இரண்டு தேர்வுகள் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. மசான் டர்போ தேர்வில் ஓர் முழு சார்ஜில் 591 கிமீ ரேஞ்ஜையும், மசான் 4 தேர்வில் 613 கிமீ ரேஞ்ஜையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

நிறுவனமும் இந்த ரேஞ்ஜ் திறனை உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதேபோல், ஸ்பீடு விஷயத்திலும் இரண்டும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. மசான் டர்போவின் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிமீ ஆகும். இதனால், வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். மாசன் 4-இன் டாப் ஸ்பீடு மணிக்கு 220 கிமீ ஆகும். இதனால் 0-100 கிமீ வேகத்தை வெறும் 5.2 செகண்டுகளில் எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே போர்ஷே நிறுவனம் அதன் அதிக சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மசான் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. ஆனால், இதன் அதிக விலையால் வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய கனியாக அது மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 27, 2024, 14:08 [IST]
English summary
Porsche macan ev launched in india at rs 1 65 crore
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X