என்ன இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா.. பெரிய பெரிய ஆளுங்களே இந்த காரை வாங்க கொஞ்சம் யோசிப்பாங்க போலையே!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche), அதன் புகழ்பெற்ற கார் மாடல் ஒன்றில் அதிக திறனை வெளியேற்றும் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பனமேரா (Panamera)விலேயே அது புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. பனமேரா ஜிடிஎஸ் (Panamera GTS) எனும் தேர்வையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பனமேரா மாடலிலேயே அதிக திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட வேரியண்ட் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.34 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரின் விலையைவிட பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக இந்த காரின் திறன் வெளிப்பாடு இருக்கின்றது. போர்ஷே நிறுவனம் இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்சினை பயன்படுத்தி இருக்கின்றது.

Porsche panamera gts

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 492 பிஎச்பி பவரை வெளியேற்றும். இது, வழக்கமான பனமேராவைக் காட்டிலும் 20 பிஎச்பி கூடுதல் ஆகும். இத்தகைய ஆற்றல்மிக்க மோட்டாரையே பனமேரா ஜிடிஎஸ் காரில் போர்ஷே பயன்படுத்தி இருக்கின்றது. இது மட்டுமில்லைங்க இதன் டாப் ஸ்பீடும் நம்மை மிரள செய்யும் வகையிலேயே இருக்கின்றது.

இது உச்சபட்சமாக மணிக்கு 302 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதுமட்டுமில்லைங்க, வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய திறன் கொண்ட காரை இயக்க வேண்டும் என்றால் அதற்கு தனி திறமையே வேண்டாம். மேலும், பலமடங்கு முன் அனுபவம் இருந்தால் மட்டுமே இந்த காரை பக்குவமாக கையாள முடியும்.

இல்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். பனமேரா ஜிடிஎஸ்-இன் இந்த அதீத திறனே, எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் அந்த காரை வாங்க கொஞ்சம் யோசிக்கச் செய்யும் வகையில் இருக்கின்றது. இந்த கார் திறனை வெளியேற்றுவதில் மட்டுமல்ல சிறப்பு வசதிகளிலும் கவரக் கூடியதாகவே உள்ளது.

அந்தவகையில், உயர் வகை மெட்டீரியல்களைக் கொண்டே இந்த காரின் உட்பக்கம் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. லெதர் மற்றும் அல்கான்டரா துணி உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் பனமேரா ஜிடிஎஸ் தேர்வில் ஸ்போர்ட்ஸ் வகை இருக்கையே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது கூடுதல் சௌகரியமான இயக்க அனுபவத்தை வழங்கும். தொடர்ந்து, போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (Porsche Active Stability Management), பெரிய தொடு திரை, நேவிகேஷன் (navigation) மற்றும் மிக சிறந்த ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் போர்ஷே ஆக்டீவ் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் உடன் கூடிய அடாப்டீவ் ஏர் சஸ்பென்ஷன், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட முக்கிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அழகியல் விஷயத்திலும் இந்த கார் நம்மை கவரக் கூடியதாகவே உள்ளது. இது ஓர் 4 கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் வகை கார் மாடல் ஆகும். இந்த காரை சிபியூ வாயிலாகவே போர்ஷே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதனால்தான் இதன் விலை பலமடங்கு அதிகமாக உள்ளது. இதன் டெலிவரி பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போர்ஷே காருக்கு என தனி ரசிக பட்டாளமே உண்டு. குறிப்பாக இந்த பனமேரா காரை வாங்குவதற்கு என்றே தனி பணக்காரர்கள் கூட்டம் உள்ளது. இதனால்தான் இந்த மாடலில் அதீத திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட வேரியண்டை போர்ஷே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2024, 22:51 [IST]
English summary
Porsche panamera gts launched in india at inr 2 34 crore a look inside
மேலும்... #porsche #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+