இந்தியாவில் எங்கு தேடினாலும் இப்படிப்பட்ட ஃபோக்ஸ்வேகன் காரை பார்க்க முடியாது!! என்ஜினின் பவர் ரொம்ப அதிகம்!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்த மிகவும் சில கார்களுள் ஒன்று போலோ (Polo) ஆகும். காம்பெக்ட்டான உடலமைப்பில், விலை குறைவானதாக இருந்ததால் இந்தியாவில் நிறைய பேர் ஃபோக்ஸ்வேகன் போலோ காரை வாங்கினர். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இந்தியாவில் போலோ காரின் விற்பனையை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நிறுத்தியது. இருப்பினும், இப்போதும் சிலரிடம் போலோ கார்கள் உள்ளன. அவ்வாறு, இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஒன்று பவர்ஃபுல்லான காராக மாற்றப்பட்டுள்ளது. இந்த போலோ கார் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

உலகளவில் கார் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார் போலோ ஆகும். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் போலோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கால ஓட்டத்தில் போலோவை காட்டிலும் தோற்றத்திலும், செயல்படுதிறனிலும் சிறந்த கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கியதால், போலோ கார்களை உற்பத்தி செய்வதை ஃபோக்ஸ்வேகன் படிப்படியாக நிறுத்திக் கொண்டது.

india s powerful volkswagen polo car

இன்னும் சொல்லப்போனால், ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் கடைசியாக விற்பனையில் இருந்தது நம் இந்தியாவில் ஆகும். நம் நாட்டில் 2010ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட போலோ, அதன் பவர்ஃபுல்லான என்ஜின் மூலமாக இந்தியர்களை வெகுவாக கவர்ந்தது. ஆற்றல்மிக்க என்ஜினை கொண்டிருந்ததினால்தான், போலோ போன்ற கார்களை ஹாட் ஹேட்ச்பேக் என்கின்றனர்.

இருப்பினும், இங்கு ஒரு போலோ கார் ஓனர் இன்னும் அதிக என்ஜின் ஆற்றலை பெறுவதற்காக காரில் சில மாற்றங்களை செய்துள்ளார். இந்த போலோ கார் தொடர்பாக யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ஹைலைட்டாக காட்டப்பட்டு இருப்பது '450 பிஎச்பி' என்கிற என்ஜினின் மேக்ஸிமம் பவர் அவுட்-புட் ஆகும். இந்தியாவில் போலோ கார்கள் இதற்குமுன்பும் நிறைய தடவை மாடிஃபை செய்யப்பட்டுள்ளன.

india s powerful volkswagen polo car

இருப்பினும், இந்தியாவிலேயே பவர்ஃபுல்லான போலோ காராக இந்த குறிப்பிட்ட போலோ அழைக்கப்படுகிறது. இந்த போலோ காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 450 எச்பி மற்றும் 580 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வகையில் கொஞ்சம் மாடிஃபை மற்றும் ட்யூனிங் செய்யப்பட்டு உள்ளது.

என்ஜினை இவ்வாறு ஆற்றல்மிக்கதாக மாற்று வேலைகளை நிக்ட்ரான்ஸ் மோட்டாஸ்போர்ட்ஸ் என்கிற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இவ்வாறான வேலைகளில் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கும் மேலாக ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. என்ஜினை அதிக ஆற்றல் வழங்கக்கூடியதாக மாற்றியுள்ளதால், இந்த போலோ காரில் எளிதாக டாப்-ஸ்பீடை எட்ட முடியும்.

india s powerful volkswagen polo car

இது, இந்தியாவின் பவர்ஃபுல்லான போலோ கார் மட்டுமல்ல, அழகான போலோ காரும் கூட. இந்த போலோ கார் பளபளப்பான கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. காரின் எடையை குறைத்து, அதிக வேகத்தில் செல்லக்கூடியதாக மாற்ற வேண்டும் என்பதற்காக காரின் வுட் மற்றும் ஃபெண்டர்கள் கார்பன் ஃபைபராக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், காரின் முன் & பின்பக்கத்தில் பம்பர்கள் ஆர்-லைன் பம்பர்களாக மாற்றப்பட்டுள்ளன.

டைனாமிக்ஸ் குழுவின் அலாய் சக்கரங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களில் மிச்செலின் ரப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரை நிறுத்த பெரிய பிரேக் கிட் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. APR எக்ஸாஸ்ட் குழாய்களை புதியதாக பெற்றுள்ள இந்த போலோ காரில் என்ஜின் ஆற்றலானது அனைத்து சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட கார் கஸ்டமைஸ்ட் நிறுவனங்களின் மூலமாக கார்களை ஓனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அவ்வாறு மாற்றப்பட்டதுதானா? என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 23:33 [IST]
English summary
Powerful volkswagen polo car that can produce 450 bhp check all details here
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X