வெறும் ரூ.16 இலட்சத்தில் இந்த புது டாடா எலக்ட்ரிக் காரை வாங்கிட முடியுமா!! ரகசியமாக இணையத்தில் கசிந்த தகவல்!

டாடா பன்ச் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இதுதான் என இணையத்தில் ஒரு படம் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இந்த புது டாடா எலக்ட்ரிக் காரை வாங்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இடியாய் விழுந்துள்ள இது தொடர்பான கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் மும்முரமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், எலக்ட்ரிக் விஷயத்தில் மாருதி சுஸுகி, மஹிந்திரா போன்ற மற்ற இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட இந்த அளவிற்கு மும்முரமாக இல்லை. நெக்ஸான் இவி மூலம் கொரோனாவுக்கு முன்பு இருந்தே எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

tata punch ev price leaked

பன்ச் இவி ஆனது டாடா மோட்டார்ஸின் 4வது எலக்ட்ரிக் கார் ஆகும். பன்ச் இவி சில தினங்களுக்கு முன்புதான் இந்தியாவில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. மேலும், இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளும் இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளன. பன்ச் இவி வெளியீடு உடன் சேர்த்து டாடா இவி என்ற புதியதொரு சப்-பிராண்டையும் டாடா குழுமம் அறிமுகம் செய்துள்ளது.

மற்ற டாடா எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் புதிய பன்ச் இவி கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 இலட்சத்தில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8.69 இலட்சத்தில் இருந்தே டாடா எலக்ட்ரிக் கார் (டாடா டியாகோ இவி) கிடைக்கிறது. இருப்பினும், பன்ச் இவி செம்ம ஸ்டைலிஷாக மாடர்ன் தரத்தில் உள்ளது.

இந்த நிலையில், டாடா பன்ச் இவி காரின் விலை என ஒரு ஸ்க்ரீன் ஷாட் படம் டுவிட்டரில் டெஸ்லா க்ளப் இந்தியா என்ற டுவிட்டர் பக்கத்தின் மூலம் பரவி வருகிறது. டெஸ்லா க்ளப் இந்தியாவின் இந்த டுவிட்டர் பதிவில், "எங்களது நண்பர் மற்றும் குழு உறுப்பினர் ஹரிராஜ் ரத்தோட், சன்ரூஃப் உடன் கூடிய டாடா பன்ச் இவி காரின் லாங் ரேஞ்ச் எம்பவர்டு+ வேரியண்ட்டை புக் செய்துள்ளார். டாடா இன்னும் காரின் விலையை அறிவிக்கவில்லை, ஆனால் அவருக்கு ரூ.16,13,729 மொத்த விலையாக குறிப்பிட்டு ஒரு இமெயில் வந்துள்ளது" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த டுவிட்டர் பதிவின் மூலம் பகிரப்பட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட் படத்தில், ஐட்டம்ஸ் என்ற இடத்தில் புதிய பன்ச் இவி காரின் படம் உள்ளது. கார் முன்பதிவு செய்யப்பட்ட தினமாக கடந்த ஜனவரி 5ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இருந்துதான் பன்ச் இவி காருக்கான முன்பதிவுகளை டாடா இவி ஏற்க துவங்கியது. ஆனால், எக்ஸ்-ஷோரூம் விலையை இன்னும் டாடா அறிவிக்கவில்லை.

tata punch ev price leaked

ஆனால், தற்போது இணையத்தில் லீக்காகி வரும் படத்தில் பன்ச் இவி காரின் விலை என ரூ.16 இலட்சத்து 13,729.25 குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ஆன்-ரோடு விலையாக இருக்கலாம். ஏனெனில், தற்போது கிடைத்துள்ள இந்த படத்தில் விலைக்கு கீழே, 'வரி உட்பட' என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஸ்ரீஜி ஆட்டோமார்ட் பிரைவேட். லிமிடெட் என்ற டீலர்ஷிப் மையத்தில் இந்த பன்ச் இவி கார் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய டாடா பன்ச் இவி எலக்ட்ரிக் கார் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ஜர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சமாக, இதன் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளை பெற முடியும். பன்ச் இவி-ஐ முன்பதிவு செய்வதற்கான டோக்கன் தொகையாக ரூ.21,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பன்ச் இவி எலக்ட்ரிக் கார் இந்தியாவின் எலக்ட்ரிக்கை நோக்கிய பயணத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இதன் விலை மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது. ரூ.10 இலட்சத்தில் இருந்து இதன் விலைகளை எதிர்பார்க்கிறோம். இருப்பினும், பன்ச் இவி காரின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை ரூ.16.13 இலட்சம் என்றால் நம்ப முடியாமல் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, January 8, 2024, 19:24 [IST]
English summary
Price for tata punch ev has been leaked on social media check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+