அடிக்கடி சார்ஜ் போட வேணாம்! டாடா நெக்ஸான் இவி, பஞ்ச் இவி கார்களின் பேட்டரியை மாற்ற திட்டம்!

டாடா நிறுவனம் விரைவில் தனது நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களில் பெரிஸ்மேட்டிக் செல் என்ற பேட்டரி பேக்கை பொருத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்மில் இப்படியான பேட்டரிகளை பொருத்த வாய்ப்பு இருப்பதாக நிரூபணம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் அறிமுகமான டாடா கர்வ் இவி காரில் இப்படியான பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன செக்மெண்டில் மிகப்பெரிய மார்க்கெட் பங்கை வைத்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகவும் 85 சதவீதமான எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் டாடா நிறுவனத்தின் தயாரிப்பாகவே உள்ளன. தற்போது நிறுவனத்திடம் விற்பனையாகி வரும் நிலையில், சமீபத்தில் தான் இந்நிறுவனம் கர்வ் என்ற புதிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

prismatic cell in tata nexon and punch ev

டாடா கர்வ் இவி காரை பொறுத்தவரை இந்தியாவில் முற்றிலுமாக புதிய பயணிகள் வாகன செக்மென்டை திறந்து உள்ளது என சொல்லலாம். கூபே ரக எஸ்யூவி காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை நிறுவனம் வழக்கமாக தனது எலெக்ட்ரிக் காரை தயாரிக்கும் அதே ஆக்டி.இவி என்ற பிளாட்பார்மில் தான் தயாரிக்கிறது. இந்த பிளாட்பார்மை அந்நிறுவனம் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பிளாட்ஃபார்மாக பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் கர்வ் இவி என்ற காரை அறிமுகப்படுத்தும் போது சில விஷயங்களை முன் வைத்தது அதன்படி டாடா நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகிய கார்களில் டாடா கர்வ் காரில் எப்படி பெரிஸ்மேட்டிக் செல் பேட்டரி பேக்கில் பொருத்தப்பட்டுள்ளதோ அதேபோல இந்த கார்களிலும் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்பொழுது இது பொருத்தப்படும் என்ற தகவல்கள் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

பெரிஸ்மெட்டிக் செல் என்றால் என்ன தற்போது உள்ள செல்லுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. தற்போது உள்ள செல் சிலிண்டர் வடிவத்தில் நாம் கடிகாரங்களில் எப்படி பேட்டரி செல்லை பயன்படுத்துகிறோமோ அதே போன்ற வடிவமைப்பில் பெரிதாக இருக்கும். ஆனால் பெரிஸ்மேட்டிக் செல் என்பது கன செவ்வக அமைப்பில் இருக்கும்.

பேட்டரி தொழில்நுட்பம் குறித்து நடந்த ஆய்வில் இப்படியான கன செவ்வக அமைப்பில் இருக்கும் பேட்டரிகள் தான் அதிக எரிசக்தியை சேமித்துக் கொள்ளும் வகையிலும் அதேநேரம் விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையிலும் இருக்கிறது என்பது நிரூபணம் ஆனது. இதற்காக தான் தற்போது இந்த பேட்டரியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களில் பொருத்துகிறது. இதன் மூலம் தற்போது இருக்கும் அதே பேட்டரி அளவில் மக்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது.

முக்கியமாக தற்போது இந்த காரில் பொருத்தப்படும் 55 கிலோ வாட்டர் கன செவ்வக அடிப்படையிலான பெரிஸ்மேட்டிக் செல் கொண்டு உருவாக்கினால் இந்த பேட்டரி பேக் விரைவாக சார்ஜ் ஏறிவிடும். உதாரணமாக 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் வெறும் 40 நிமிடத்தில் ஏற்றி விடும் . தற்போது இருக்கும் சார்ஜ் ஏறும் நேரம் குறித்த பிரச்சனைக்கு இது ஒரு முக்கிய தீர்வாக அமைகிறது.

அதேநேரம் பெரிஸ்மேட்டிக் செல் கொண்டு இயங்கும் வாகனங்கள் சாதாரண மற்ற பேட்டரி கொண்டு இயங்கும் வாகனங்களை விட அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் பெரிஸ்மேட்டிக் செல்லை மாற்ற திட்டமிட்டு வரும் நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த முடிவை கையில் எடுத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பேட்டரி பேக்கை இந்த கார்களில் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இந்நிறுவனம் வெளியிட போகும் ஹாரியர் இவி மற்றும் சஃபாரி இவி ஆகிய கார்களிலும் பொருத்தும் என்ற எதிர்பார்ப்பு தற்போது இருக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி வருகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை வரவும் இப்படியான அப்டேட்களை எல்லாம் செய்து வருகிறது. இது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். ஆனால் பெரிஸ்மேட்டிக் செல் கொண்ட பேட்டரிகளில் சில பிரச்சினைகள் இருக்கிறது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முறையான விளக்கங்களை அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 10:49 [IST]
English summary
Prismatic cell tata nexon punch ev upgrade details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+