உற்பத்திக்கு தயாராக இருக்கும் 5 டோர் தார் ராக்ஸ் கேமிராவின் கண்களில் சிக்கியது! மழை டைம்லையும் இவ்ளோ வேகமா!!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் (Mahindra Thar) கூடிய சீக்கிரமே நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகையை ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டது. மேலும், இந்த 5 டோர் தார், தார் ராக்ஸ் (Thar Roxx) எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்பதையும் நிறுவனம் உறுதி செய்திருக்கின்றது. டீசர் வாயிலாக அதன் பெயரை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இதன் பெயரை மட்டுமில்லைங்க 5கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் கார் மாடலில் இடம் பெறவிருக்கும் சிறப்பம்சங்களையும் டீசர் வாயிலாகவே மஹிந்திரா உறுதிப்படுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேயே உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் மஹிந்திரா தார் அதி வேகமாக நெடுஞ்சாலையில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. மழை பொழிந்துக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே இந்த கார் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த மழையிலும் அதிக வேகத்தில் அக்கார் இயக்கப்பட்டு இருக்கின்றது.

Mahindra thar roxx spotted in road

எனவே, மழையால் சாலை மிக ஈரப்பதமாக இருந்தாலும் இந்த கார் அதிக வேகத்தில் பயணிக்க உகந்த வாகனமாக இருக்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது. ஆனால், பாதுகாப்பு கருதி நாம் மழை காலத்தில் வேகம் குறைவாக பயணிப்பதே நல்லது என்பது எங்களின் கருத்தாகும். மேலும், இம்முறையும் மறைக்கப்பட்ட நிலையிலேயே தார் ராக்ஸ் சோதனையோட்டம் செய்யப்பட்டது.

இருப்பினும், காற்று மற்றும் அதிக வேகம் காரணமாக அந்த மறைப்பு விலகி இருந்தது. இதனால், தார் ராக்ஸ் கார் மாடலில் சிவப்பு வண்ண ஆப்ஷன் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றே இந்த காரை வெளியீடு செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

Mahindra thar roxx spotted

எனவே வெகு விரைவிலேயே தார் ராக்ஸ் விற்பனையாளர்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் மற்றும் சமீபத்திய டீசர் படங்கள் வாயிலாக இந்த காரில் மிக முக்கியமான சில அம்சங்கள் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

அந்தவகையில், தார் ராக்ஸ் மிகவும் கட்டுமஸ்தான உடல் பேனல், மனம் கவரும் அழகிலான அணிகலன்கள் (எல்இடி ஹெட்லைட், இன்டிகேட்டர், பகல்நேர மின் விளக்கு மற்றும் அலாய் வீல்), பெரிய உடல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது. தார் 3 டோர் வெர்ஷனைக் காட்டிலும் அதிக அழகாகவும், பெரிய உருவம் கொண்டதாகவே தார் ராக்ஸ் இருக்கப்போகின்றது.

தொடர்ந்து, அட்ஜெஸ்டபில் முன் பக்க இருக்கை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் கர்டோன் ஆடியோ சிஸ்டம், லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பெரிய திரைகள் உள்ளிட்டவை தார் ராக்ஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடல் (5 டோர் தார் ராக்ஸ்)-ம், 3 டோர் தார்-ம் ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே 5 டோர் தார் ராக்ஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் தார் ராக்ஸ்-ம் ஒன்றாகும். இந்த காருக்கு 3 டோர் தார் கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 22:09 [IST]
English summary
Production version mahindra thar roxx 5 door spotted here is more details
மேலும்... #mahindra #mahindra thar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X