இந்த காரை வாங்கினீங்கனா அந்தஸ்து தானா தேடி வரும்.. உல்லாச கப்பலையே அழகுல இந்த கார் தோக்கடிச்சிரும் போலையே!

இந்திய பணக்காரர்களின் ஃபேவரிட் கார் மடால்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) காட்சியளிக்கின்றது. இந்தியாவில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இந்த கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றனர். ஆடம்பர அம்சங்களுக்கு பெயர்போனதாகக் காட்சியளிக்கும் இந்த கார் மாடல் நாட்டில் பல விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், ரேஞ்ச் ரோவர் எஸ்வி (Range Rover SV)-யும் ஓர் சூப்பரான ஆப்ஷனாகக் காட்சியளிக்கின்றது. இதிலேயே லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரதம்போர் எடிசன் (Range Rover SV Ranthambore Edition)-னையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 4.98 கோடி எனும் உச்சபட்ச விலையை நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Range rover sv ranthambore edition launched

மேலும், இந்த சிறப்பு பதிப்பை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வெறும் 12 யூனிட்டுகள் மட்டுமே நிறுவனம் விற்பனைக்காக ஒதுக்கி இருக்கின்றது. இதனை வழக்கமான ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார் மாடலைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சியனாதாக தயார் செய்திருக்கின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

இதன் அடிப்படையில் பல தனித்துவமான அம்சங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், அட்டகாசமான கருப்பு நிறம், கொரிந்தியன் வெண்கலம் நிறங்களைக் கொண்டே இந்த காரின் வெளிப்பக்கத்தை லேண்ட் ரோவர் அலங்கரித்திருக்கின்றது. இதுதவிர, இன்னும் சில பிரத்யேக நிறத்தலான அணிகலன்களைக் கொண்டும் இந்த காரின் வெளிப்பக்கத்தை நிறுவனம் அழகுப்படுத்தி இருக்கின்றது.

Range rover sv ranthambore edition front seat

தொடர்ந்து, புலியின் கோடுகளைப் பிரதிபலிக்கும் ஸ்டைலில் கிரில், டெயில்-கேட் மற்றும் 23 அங்குல அலாய் வீல் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த காரின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உட்பக்கமும் மிகுந்த கவர்ச்சியானதாகவும், தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, மிகுந்த சொகுசான ரைடு அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு ஏற்ற காராக இதனை ரேஞ்ச் ரோவர் தயார் செய்திருக்கின்றது.

உதாரணமாக ஆறு முதல் ஏழு பேர் வரை போகக் கூடிய இந்த காரை வெறும் நான்கு பேர் மட்டுமே போகின்ற வகையில் அது தயார் செய்துள்ளது. நான்கு இருக்கைகள் அதில் வழங்கப்பட்டு உள்ளது. இது மிகுந்த சொகுசான வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகும். இத்துடன் காரவே (Caraway) அம்சமும் இருக்கைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

Range rover sv ranthambore edition rear seat

இதைத்தொடர்ந்து, பெர்லினோ செமி-அனிலைன் (Perlino Semi-Aniline Leather) லெதரால் இந்த இருக்கைகள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மேலும், எம்ப்ராய்டரி டிசைனும் இந்த காரின் இருக்கைகளில் இடம் பெற்றிருக்கும். மேலும் முன் இருக்கைகள் ஓர் நிறத்திலும், பின் இருக்கைகள் ஓர் நிறத்திலும் வழங்கப்பட்டு இருக்கும். கேபினுக்கு கூடுதல் பிரீமியம் லுக்கை வழங்கும் வகையிலேயே இந்த வேலை பார்க்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகின்றது.

எனவே இந்த காரில் தாராளமான சொகுசான ரைடு அனுபவம் கிடைப்பதுடன், பிரீமியம் ஃபீலும் மிக மிக அதிகளழில் கிடைக்கும் என உறுதியாக தெரிகின்றது. இந்த சிறப்பு பதிப்பின் பின் இருக்கையில் வழங்கப்பட்டிருக்கும் இருக்கைகள் முழுமையாக சாய்த்துக் கொள்ளும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

இத்துடன், பவர்டு டேபிள், கோப்பை தாங்கிகள், சிறிய குளிர்சாதன பெட்டி என ஏகப்பட்ட வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே வேற லெவல் டிராவல் அனுபவத்தை இந்த கார் வழங்கும் என நம்பப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர், டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 400 எச்பி மற்றும் 550 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதே எஞ்சினே ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பின் விற்பனையில் இருந்து கிடைக்கும் லாபத்தின் பெரும் பகுதியை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இதற்காகவே பெரும் பணக்காரர்கள் இந்த காரை விலை பார்க்காமல் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் மாடலில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து வெர்ஷன்களுக்கும் பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே உல்லாச கப்பல் மாதரியான ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரந்தம்போர் எடிசன் கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 29, 2024, 19:00 [IST]
English summary
Range rover sv ranthambore edition launched in india at rs 4 98 cr inspired by tigers
மேலும்... #land rover #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X