இஷ்டத்துக்கு மைலேஜை சொல்லுவாங்க! ஆனா உண்மையில் இந்த கார் எவ்வளவு மைலேஜ் தரும் தெரியுமா?

இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார் ஸ்டேட்மெண்டாக காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் தான் இருக்கிறது. இந்த காரில் பல்வேறு விதமான அம்சங்கள் நிறைந்த கார்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. மாருதி, மஹிந்திரா, டாடா, கியா, ரெனால்ட், ஹுண்டாய், நிஸான் போன்ற நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் சிறப்பான கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த கார்களின் மைலேஜ் என வாகன தயாரிப்பு நிறுவனம் கூறுவது என்ன? உண்மையாக எவ்வளவு மைலேஜ் கிடைக்கிறது? என்ற விவரங்களை தான் காண போகிறோம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் இந்த காரை அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. 1.2 லிட்டர் டர்போ சார்ஜர் எம்-ஸ்டாலின் டிஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 128 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

real world mileage of compact suv cars

இந்த கார் 18.2 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ஏஆர்ஏஐ சான்று அளித்துள்ளது. ஆனால் ரியல் வேல்டில் இந்த காரை ஓட்டி பார்க்கும்போது சிட்டியில் ஒன்பது புள்ளி 61 கிலோமீட்டர் மைலேஜ் 18.08 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. இந்நிறுவனம் சொல்லும் மைலேஜ் கிட்டத்தட்ட ஹைவேயில் கிடைக்கிறது. ஆனால் சிட்டியில் அதன் மைலேஜ் பாதியாக குறைகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஹூண்டாய் வென்யூ: ஹுண்டாய் நிறுவனத்தில் இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 118 பிஎச்பி பவரையும் 178.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இந்தியாவில் விற்பனையாகும் சிறப்பான காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருக்கிறது.

real world mileage of compact suv cars

இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை ஹுண்டாய் நிறுவனம் 18.3 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஏன ஏஆர்ஏஐ தெரிவித்துள்ளது. இதை ஓட்டிப் பார்த்த பலர் இந்த கார் சிட்டியில் 12.58 கிலோ மீட்டர் மைலேஜும், ஹைவேயில் இந்த காரை ஓட்டும் போது 18.8 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது. அந்நிறுவனம் சொன்ன மைலேஜ் விட ஹைவேயில் அதிகமான மைலேஜ் கிடைக்கிறது. சிட்டியிலும் ஓரளவு டீசென்டான மைலேஜ் கிடைக்கிறது.

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா: மாருதி நிறுவனம் நீண்ட நாட்களாக இந்த காரை விற்பனை செய்து வருகிறது. பல்வேறு அப்டேட்களை இந்த கார் பெற்றுள்ளது. தற்போது 1.5 லிட்டர் இன்ஜின் உடன் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இது 102 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது.

real world mileage of compact suv cars

இந்த காரின் மைலேஜை பொறுத்தவரை 19.0 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குவதாக ஏஆர்ஏஐ சான்று அளித்துள்ளது. இதை ஓட்டிப் பார்த்த பலர் இந்த கார் சிட்டியில் 13.1 கிலோமீட்டர் மைலேஜ், ஹைவேயில் 18.63 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக தெரிவித்துள்ளார்கள். கிட்டத்தட்ட நிறுவனம் சொன்ன மைலேஜ் ஹைவேயில் இந்த கார் தருகிறது.

டாடா நெக்ஸான்: டாடா நிறுவனத்தின் எக்ஸான் காரைப் பொறுத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 118 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 17.18 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ஏஆர்ஏஐ சான்று அளித்துள்ளது. இந்த காரை ஓட்டி பார்த்த பலர் இந்த கார் சிட்டியில் 9.1 கிலோமீட்டர் மைலேஜ், 16.6 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாக தெரிவித்துள்ளார்கள். இந்நிறுவனம் சொன்ன மைலேஜ் விட சற்று குறைவாக தான் தெரிகிறது குறிப்பிடத்தக்கது.

கியா சோனட்: கியா நிறுவனம் தனது சோனட் காரை அடாஸ் தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 120 பிஎச்பி பவரையும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு 19.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என ஏஆர்ஏஐ சான்றளித்துள்ளது. இந்த காரை ஒட்டிப் பார்த்த பலர் இந்த கார் சிட்டிக்குள் 9.84 கிலோமீட்டர் மைலேஜ் 17.72 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். ஏஆர்ஏஐ சான்றளிக்கப்பட்ட மைலேஜ் விட இது மிகவும் குறைவான மைலேஜ் தான் தருகிறது.

ரெனால்ட் கைகர்: ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் காரை பொருத்தவரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 99 பிஎச்பி பவரையும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஏகப்பட்ட அம்சங்கள் இருப்பதால் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

இந்த கார் 19.03 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ஏஆர்ஏஐ சான்று வழங்கி உள்ளது. ஆனால் இந்த காரை ஓட்டிப் பார்த்த பலர் சிட்டியில் 10.38 கிலோமீட்டர் மைலேஜ், ஹைவேரயில் 17 38 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். அந்நிறுவனம் சொன்னதை விட மிக குறைவான மைலேஜ் இந்த கார் வழங்குகிறது.

நிஸான் மேக்னெட்: நிஸான் நிறுவனத்தின் மேக்னெட் காரை பொருத்தவரை சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஸ்மூத்தான டிரைவிங் அனுபவம் தரும் காராக இருக்கிறது. இந்த கார் 100பிஎச்பி திறனையும் வெளிப்படுத்தும் காராக இருக்கும் நிலையில், இந்த கார் 19.7 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ஏஆர்ஏஐ சான்று வழங்கியுள்ளது. ஆனால் இந்த காரை ஓட்டி பார்த்தவர்கள் சிட்டிக்குள் 12.74 கிலோ மீட்டர் மைலேஜ்யும், ஹைவேயில் 18.24 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் மைலேஜ் குறித்த விபரஙகளை வெளியிடும் நிலையில் வாடிக்கையாளர்கள் இது உண்மையென நம்புகிறார்கள். இந்த மைலேஜ் நாம் காரை வாங்கி ஓட்டும்போது மாறுபட வாய்ப்புள்ளது. இதனால் ரியல் வேல்டு மைலேஜ் பற்றி தெரிந்து கொண்டு கார் வாங்கும் முடிவை எடுக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 29, 2024, 16:07 [IST]
English summary
Real world mileage compact suv petrol autotransmission
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X