இனி ஒரு உயிர் கூட அநியாயமா போக கூடாது! சாட்டையை கையில் எடுத்த மத்திய அரசு! கார் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (Ministry of Road Transport & Highways), வரைவு அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து கார்களிலும், ரியர் சீட் பெல்ட் அலாரம் (Rear Seat Belt Alarm) வசதியை கண்டிப்பாக வழங்க வேண்டும்.

இந்திய சட்டதிட்டங்களின்படி, கார்களின் பின் இருக்கைகயில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்ற மறுப்பவர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் (Motor Vehicle Act) கீழ், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் பின் இருக்கை பயணிகள் பலர் சீட் பெல்ட் அணிவதில்லை.

Maruti Alto K10

இன்னும் சொல்லப்போனால், காரின் முன் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என பலரும் தவறாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் விதிமுறைகளின்படி, கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை பின்பற்ற மறுப்பதால், சாலை விபத்துக்களின்போது (Road Accidents), பின் இருக்கை பயணிகள் படுகாயம் அடையவோ அல்லது உயிரிழக்கவோ நேரிடுகிறது.

இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, கார்களில் ரியர் சீட் பெல்ட் அலாரம் வசதி கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்று கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால், இந்த வசதி அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும். பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிவதற்கு, இந்த நினைவூட்டல் ஏதுவாக இருக்கும்.

Rear Seat Belt

இதன் காரணமாக கார் விபத்துக்களின்போது, உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் குறையலாம் என மத்திய அரசு கருதுகிறது. எனவேதான் அனைத்து கார்களிலும் ரியர் சீட் பெல்ட் அலாரம் வசதியை மத்திய அரசு கட்டாயமாக்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மத்திய அரசின் இந்த நடவடிக்கையை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வரவேற்கிறது. எனினும் ரியர் சீட் பெல்ட் அலாரம் வசதி கூடுதலாக வழங்கப்படுவதால், கார்களின் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விலை உயரும் என்பதற்காக, பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள கூடாது என்பதே எங்கள் கருத்து.

எனவே இது கண்டிப்பாக அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கைதான். ஆனால் ரியர் சீட் பெல்ட் அலாரம் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கார்களின் விலை பெரிய அளவில் எல்லாம் உயர்ந்து விடாது. சிறிய அளவில் மட்டுமே விலை உயர்த்தப்படும் என நாங்கள் கருதுகிறோம்.

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக கார்களில் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதற்கு முன்பாக இன்னும் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே வரும் காலங்களில் மேலும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக்கப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2024, 14:49 [IST]
English summary
Rear seat belt alarm mandatory in cars from 1st april 2025 all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+