இது தெரியாம இந்த காரை வாங்கிடாதீங்க! எம்ஜியின் புது இவி கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?
எம்ஜி நிறுவனம் நேற்று தனது மூன்றாவது எலெக்ட்ரிக் காரன எம்ஜி விண்ட்ஸர் இவி என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் எம்ஜி நிறுவனம் வூலிங் என்ற பிராண்டில் கிளவுட் இவி என்ற காரை விற்பனை செய்து வருகிறது. அந்த காரை தான் மாற்றியமைத்து இந்தியாவில் விண்ட்ஸர் இவி என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை வாங்கும் திட்டம் இருந்தால் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டு இந்த காரை வாங்க முடிவு செய்யுங்கள்.
எம்ஜி நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், மூன்றாவது எலெக்ட்ரிக் காராக தான் இந்த விண்ட்ஸர் இவி என்ற காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 9.99 லட்சம் என்ற விலையில் இந்த கார் இந்தியா மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் வேரியின்ட் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலை விவரங்கள் குறித்து தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.

எம்ஜிஆர் நிறுவனம் புதுமையாக இந்த காரில் பேட்டரி சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு கிலோமீட்டருக்கு ரூ3.5 செலுத்தினால் போதும் பேட்டரி சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணைந்து கொள்ளலாம் என அனைவரும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் டாடா மோட்டார் நிறுவனம் தான் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்று வரும் நிலையில் எம்ஜி நிறுவனமும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறது.
எம்ஜி விண்ட்ஸர் இவி விலை என்ற நிறுவனம் தனது விண்ட்ஸர் இவி காரைப் பொறுத்தவரை ரூபாய் 9.99 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது எலெக்ட்ரிக் காருக்கு மிக குறைவான விலையாகும். இதனால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் பேட்டரி பேட்டரிக்காக சப்ஸ்கிரைப் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது பலரை ஈர்த்துள்ளது.

எம்ஜி நிறுவனம் தனது விண்ட்ஸர் இபி காரின் டெஸ்ட் டிரைவ் வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி துவங்குகிறது இந்த கார் புக்கிங் அக்டோபர் மூன்றாம் தேதி முதல் துவங்குகிறது. அக்டோபர் மாதம் 12ஆம் தேதி முதல் இந்த காரின் டெலிவரி துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நீங்கள் இந்த காரை வாங்கும் திட்டத்தில் இருந்தால் இந்த தேதிகளை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எம்ஜி நிறுவனம் தனது விண்ட்ஸர் இவி காரை சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் கிளவுட் இவி காரின் வடிவமைப்பு போலவே வடிவமைத்துள்ளது. முக்கியமாக பிராண்ட் லோகோ மட்டும் மாற்றியமைக்கப்பட்டது போல தான் இதன் வடிவமைப்பு இருக்கிறது. இதன் இதில் எல்இடி டிஆர்எல், லுமினேட் செய்யக்கூடிய பிராண்ட் லோகோ, எல்இடி லைட், கனெக்டட் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. முக்கியமாக ஃபிளாஷ் ஃபிட்டிங் டோர்கள் 18 இன்ச் கொண்ட டைமண்ட் கட் அலாய் வீல் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

எம்ஜி விண்ட்ஸர் இவி காரின் அம்சங்களை பொருத்தவரை பிளாட் ஃபாட்டம் ஸ்டேரிங் வீல், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 135 டிகிரி சாய்க்கக் கூடிய பின்பக்க சீட்டுகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட அம்சங்களை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
இந்த காரின் 38 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 134 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 331 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை 3.3 கிலோ வாட் சார்ஜர் மூலம் 15 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து வர முடியும் இதுவே 7.4 கிலோ வாட் சார்ஜரை பயன்படுத்தினால் 7.5 மணி நேரம் தான் ஆகும். இந்த கார் ஃபாஸ்ட் சார்ஜரில் 0 முதல் 80 சதீவீத சார்ஜை வெறும் 55 நிமிடத்தில் சார்ஜ் செய்து விடுகிறது.
இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6ஏர்பேக்குகள், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பின்பக்க பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், பின்பக்க டி ஃபாகர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சீட்டுகளிலும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் பொருத்தப்பட்டுள்ளது. 360 டிகிரி சரவுண்ட் கேமரா எல்இடி கார்னரிங் லைட்டுகள் சிஸ்டம், ஐஎஸ்ஓ பிக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவர்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸ்ர் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த கார் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இந்த காரை வாங்க மக்கள் பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பலர் புக் செய்ய காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் இந்த தகவல் உதவும்.


Click it and Unblock the Notifications









