தீபாவளிக்கு கம்மி விலைக்கு கார் வாங்க செம சான்ஸ்! இதை பண்ணா போதும் ஏகப்பட்ட பணம் மிச்சம்!
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு புதிதாக வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பதால் அவர்கள் மத்தியில் ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனத்தை வாங்குவதை ஊக்குவிப்பதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய வாகன விலையில் 1.5 முதல் 3.5 சதவீதம் வரை தள்ளுபடிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ரூபாய் 25000 வரை இந்த தள்ளுபடிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பழைய வாகனங்களை தொடர்ந்து மக்கள் பயன்படுத்தி வருவதால் மாசு அதிகமாக இருக்கிறது. இதனால் பழைய வாகன பயன்பாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன்படி தற்போது பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான பாலிசிகளையும் வைத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இந்தியா முழுவதும் விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதே நேரம் பழைய வாகனங்களை விற்பனை செய்துவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் இருப்பார்கள். இப்படியாக பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து விட்டு அவர்களை புதிய வாகனங்கள் வாங்க வைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
இதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி பல்வேறு பயணிகள் காரணங்கள் மற்றும் சொகுசு கார் நிறுவனங்கள் ஏற்கனவே வாகனங்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் அந்த வாகனத்தை ஸ்கிராப் செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய வாகனத்தை வாங்க முன் வந்தால் அவர்களுக்கு புதிய வாகன விலையில் 1.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை தள்ளுபடிகளை வழங்க முன் வந்துள்ளது.

இந்த தள்ளுபடி ரூபாய் 25,000 வரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை ஒவ்வொரு நிறுவனங்களும் தனித்தனியாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒவ்வொரு விதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான பெரும் முயற்சியை எடுத்து இந்த தள்ளுபடிகளை அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இது மட்டுமல்ல மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இப்படியாக பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து விட்டு புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியிலும் தள்ளுபடிகளை வழங்குவதற்காக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முக்கியமாக கமர்சியல் வாகனங்களுக்கு இது மிகப்பெரிய அளவில் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கமர்சியல் வாகன விற்பனையாளர்கள் பலர் ஏற்கனவே பழைய கமர்சியல் வாகனத்தை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய கமர்சியல் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஸ்கிராப்பிங் பாலிசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வாகனங்களை ஸ்கிராப் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 1.2 லட்சம் வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளன. அதில் 61 ஆயிரம் வாகனங்கள் அரசு வாகனங்களாக உள்ளன. இந்த வாகனங்கள் எல்லாம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த வாகனங்களாக இருக்கிறது. இந்தியாவில் வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்க்குள் 90 ஆயிரம் அரசு வாகனங்களை ஸ்கிராப் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அரசு இந்தியா முழுவதும் 60 பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிப்பிங் மையங்களை நடத்தி வருகிறது. மேலும் 75 தானியங்கி சோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வரியில் சலுகைகளை அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலும் 18 மாநிலங்களில் ஏற்கனவே காலாவதியாகி சாலையில் இயங்கி வந்த வாகனங்களுக்கு ஏதாவது பழைய பாக்கி இருந்தால் அதை முற்றிலுமாக ஸ்கிராப்பிங் செய்யும் போது ரத்து செய்ய புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









