ஜியோ சிம்-மை போல வாடிக்கையாளர்களின் மனதை கவரும் ஜியோ இவி ஏரியஸ் கருவி... அமேசான்லயே விற்பனைக்கு வந்திருச்சு!
இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது புதிய மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கருவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜியோ இவி ஏரியஸ் (JioEV Aries) என்கிற பெயரே அந்த சார்ஜிங் கருவிக்கு சூட்டப்பட்டு உள்ளது. இது தற்போது ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கும். இது யுனிவர்சல் டைப் 2 வகை சார்ஜிங் கருவியாகும். இதன் வாயிலாக அனைத்து விதமான மின்சார கார்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வகை கார்களையும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.
இதற்கேற்பவே இந்த காரை ரிலையன்ஸ் ஜியோ வடிவமைத்திருக்கின்றது. இது 7.4 kW சார்ஜிங் திறனைக் கொண்டுள்ளது. இது மின்சார வாகனங்களின் பேட்டரிகளை ஒரே இரவில் நிரப்பிவிடும் திறன் கொண்டது. மேலும், சிஇ மற்றும் அராய் (ARAI) சான்றிதழ்களையும் இந்த சார்ஜிங் கருவிப் பெற்றிருக்கின்றது.

இது தவிர ஐபி 55 (IP55) மற்றும் ஐகே 10 (IK10) தர மதிப்பீட்டையும் இந்த சார்ஜிங் கருவிகள் பெற்றிருக்கின்றன. அதாவது, கடினமான சூழ்நிலைகளை தாங்கும் வகையில் இந்த சார்ஜிங் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தூசி, நீர் உள்ளிட்டவற்றால் எந்தவொரு தாக்குதலுக்கும் அவை ஆளாகாது.
மேலும், சார்ஜர் 360 டிகிரி வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால், அதிக பாதுகாப்பானதாக அது இருக்கும் என தெரிகின்றது. ஆர்சிடி, ஓவர் கரண்ட், ஓவர் வோல்டேஜ், அண்டர்-வோல்டேஜ், ஷார்ட் சர்க்யூட், ஓவர் டெம்பரேச்சர், கிரவுண்ட் ஃபால்ட் மற்றும் சர்ஜ் ப்ரொடெக்ஷன் ஆகிய பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கருவி தாங்கி இருக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த அம்சங்கள் சார்ஜ் செய்யும் போது மின்சார வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுகின்றது. இந்த சார்ஜிங் கருவியின் ஒட்டுமொத்த எடையே 3.75 கிலோ மட்டுமே ஆகும். எங்கு வேண்டுமானாலும் இதை பொருத்திக் கொள்ள முடியும்.
சுவர், தூண் என எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொண்டு மின்சார வாகனங்களை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இதே போல் மின்சார வாகனங்களை இதைக் கொண்டு சார்ஜ் செய்வதும் சுலபமே ஆகும். இது தவிர இந்த கருவியுடன் ஸ்மார்ட் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
பயனாளிகள் அட்வான்ஸ்டு சார்ஜிங் அனுபவத்தை பெறும் நோக்கில் இந்த வசதி அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஜியோ ட்ரூ பவர் (Jio True Power) செயலி வாயிலாகவே இந்த ஆப்ஷனல் சிறப்பம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. 4ஜி, ஒய்-ஃபை மற்றும் லேன் ஆகியவையே அடங்கும்.
இந்த இணைப்பு அம்சத்தின் வாயிலாக சார்ஜிங் அனுபவத்தை முழுமையாக நிர்வகிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று அட்வான்ஸ்டு சிறப்புகள் பலவற்றை தாங்கியதாகவே ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சார்ஜிங் கருவி அமைந்துள்ளது. ஜியோ சிம்மிற்கு கிடைப்பதைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜியோவின் புதிய மின்சார வாகன சார்ஜர் மின்சார வாகனம் சார்ஜ் செய்வதை மேலும் அணுகக்கூடியதாகவும் வசதியாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் இணைப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை மிகப் பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவின் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் இணைந்த மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஜியோ இந்த சார்ஜிங் கருவியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. விரைவில் இந்த நிறுவனம் மின்சார வாகன விற்பனையைத் தொடங்கினாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications








