சென்னை சாலையில் சுற்றிய மர்ம கார்! இந்த கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?

ரெனால்ட் நிறுவனம் தற்போது சென்னை சாலைகளில் தனது புதிய காரை சோதனை செய்ய துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் இந்த கார் தற்போது இந்தியாவிற்கு கொண்டுவர நிர்வனம் திட்டமிட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி இந்த விரைவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய இந்த கார் என்னென்ன அம்சங்களை எல்லாம் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தயார் செய்யும் வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்நிறுவனம் தயார் செய்த டஸ்டர் கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திய காராக இருக்கிறது.

renault austral

தற்போது இந்நிறுவனத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் இருக்கின்றன. இருந்தாலும் விரைவில் நிறுவனம் சர்வதேச மார்க்கெட்டில் இருந்து பல்வேறு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது புதிய காராக இந்தியாவில் இந்நிறுவனம் ஆஸ்ட்ரல் என்ற காரை இந்தியாவில் களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த காரை தற்போது சென்னை சாலைகளில் இந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சர்வதேச அளவில் இந்த ஆஸ்ட்ரல் கார் சிஎம்எப் சிடி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராகவும். இந்த பிளாட்பார்மை மிட்சுபிஷி மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன. இந்த பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் கார் இந்திய மார்க்கெட் ஏற்ற காரராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

renault austral

தற்போது நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய தயாரிப்புகளை களம் இறக்க முதலீடுகளை செய்ய உள்ளதாக திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிதாக டஸ்டர் மற்றும் ரெனால்ட் ஆகிய கார்கள் விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமல்லாமல் பிரீமியம் செக்மெண்டிலும் வாகனங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது.

தற்போது அந்நிறுவனம் சென்னை சாலையில் சோதனையிட்டு வரும் ஆஸ்ட்ரல் காரை பொறுத்தவரை அதிக அம்சங்கள் மற்றும் அதிக வசதிகள் நிறைந்த காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் களமிறங்க வாய்ப்புள்ளது.

renault austral

ரெனால்ட் ஆஸ்ட்ரல் காரை பொறுத்தவரை இந்தியாவில் இ-டெக் வேரியன்ட் கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட காராகும் இந்த காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 400 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு கிலோவாட் ஹவர் பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் ப்ரீமியம் செக்மெண்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் ஆஸ்ட்ரல் கார் பிரீமியம் செக்மெண்டில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் போட்டி தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய போட்டியை வழங்கும் வகையிலான பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது அதிக பிரீமியம் அம்சம் மற்றும் வசதிகள் நிறைந்த காராக இருக்கும். அதே நேரத்தில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் புதிதாக உட்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் பிரீமியம் செக்மென்டை குறி வைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த கார் மீது ஒரு கண்ணை வைத்துள்ளார்கள். இந்த கார் இந்தியாவிற்கு அறிமுகமாகும் போது உடனடியாக இந்த காரை வாங்க பலர் காத்துக் கொண்டிருப்பார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனத்தின் ஆஸ்ட்ரல் கார் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து ஏகப்பட்ட முதலீடை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதால் நிச்சயம் இதன் தயாரிப்புகளும் தரமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 7:00 [IST]
English summary
Renault austral hybrid spied e tech powertrain
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X