குடும்பம், குழந்தைகளோட போற டஸ்டர் 7 சீட்டர் கார் ரெடியாகிடுச்சு! இந்த கார் எப்ப இந்தியா வருது தெரியுமா?
ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரில் 7 சீட்டர் காரை இந்தியாவிற்கு கொண்டு வரப் போவது தற்போது உறுதியாகி உள்ளது0 இந்த கார் தற்போது சோதனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். ரெனால்ட் நிறுவனத்தில் இந்த டஸ்டர் கார் எப்பொழுது இந்தியாவிற்கு வரும் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் நிஸான் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் காரர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்நிறுவனம் முதன்முதலாக களம் இறங்கிய டஸ்டர் கார் இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் பெற்றது. இன்றளவும் அந்த காருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். டஸ்டர் காரை சாலையில் பார்த்தாலே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு அதன் வடிவமைப்பு இருந்ததால் பலர் அந்த காரை விரும்பினார்கள்.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கியது என்றால் டஸ்டர் கார் தான் என சொல்லலாம். அந்த அளவிற்கு டஸ்டர் கார் மக்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. அதன் பின்னர் சில காரணங்களுக்காக டஸ்டர் கார் தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை புதிதாக தயாரித்து விற்பனை செய்யவில்லை.
இந்நிலையில் ரெனால்ட் நிறுவனம் மீண்டும் தனது டஸ்டர் காரை மறுவடிவமைப்பு செய்து. இந்தியாவில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 5 சீட்டர் டஸ்டர் காருடன் இந்த 7 சீட்டர் கொண்ட காரையும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போது சோதனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே டஸ்டர் காரின் 5 சீட்டர் கொண்ட வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்வதேச அளவில் டஸ்டர் காரின் ஏழு சீட்டர் கொண்ட வெர்ஷன் தான் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. 7 சீட்டர் கொண்ட வெர்ஷனிலும் ஐந்து சீட்டர் காரிலும் ஒரே மாதிரியான இன்ஜின்கள் தான் உள்ளன. அதன்படி இந்த காரில் 1.0 லிட்டர் எல்பிஜி இன்ஜின் பொருத்தப்படுகிறது.
இந்த இன்ஜின் கொண்ட இந்த கார் குறிப்பிட்ட சில மார்க்கெட்டில் மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இன்ஜின் ஆப்ஷனாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது ஹைபிரிட் செட்டப்புடன் 48 ஓல்ட் ஸ்டார்டர் மோட்டார் உடன் 130 எச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

மூன்றாவது இன்ஜின் ஆப்ஷனாக 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இதில் 1.2 கிலோ வாட் பேட்டரி மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் 80 சதவீதம் முழுமையாக எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இதில் ஒரு ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் டூ வில் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான அம்சங்கள் கொண்ட காராக இது இருக்கும் எனவும், இதில் எக்கோ, ஆஃப் ரோடு, ஸ்னோ, சாண்ட் மற்றும் ஆட்டோ ஆகிய டிரைவிங் ஆப்ஷன்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை புதிய தலைமுறை ஐந்து சீட்டர் டஸ்டர் காரின் வடிவமைப்பே கிட்டத்தட்ட இந்த காரிலும் இருக்கிறது.
இது ஒரு ஏழு சீட்டர் கார் என்பதால் இதன் நீளம் மற்றும் சற்று அதிகமாக இருக்கிறது. தற்போது உள்ள டஸ்டர் கார் 4.34 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. ஏழு சீட்டர் கொண்ட டஸ்டர் 4.6 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வீல் பேஸூம் சற்று நீளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 சீட்டர் கொண்ட டஸ்டர் காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் பிளே, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஏழு இன்ச் கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025-ம் ஆண்டு மத்தியில் ரெனால்ட் நிறுவனம் 5 சீட்டர் கொண்ட டஸ்டர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கார் வெளியான அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அதன் பெரிய வெர்ஷன் காராக ஏழு சீட்டர் கொண்ட டஸ்டர் கார் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன. இந்த இரு கார்களும் நிஸான் வெர்ஷன் காரும் இந்தியாவில் அறிமுகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் மத்தியில் டஸ்டர் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இன்றளவும் கஷ்டக்காரர் மீதான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் டஸ்டர் காருக்கு மிகப்பெரிய அளவு டிமாண்ட் இருக்கிறது. இதனால் அந்த காரின் விலையும் பெரிய அளவு குறையாமல் இருக்கிறது. இந்த தருணத்தில் டஸ்டர் கார் மீண்டும் வந்தால் ரெனால்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி தான்.
Source: Dacia Duster Trails & Technical/Facebook


Click it and Unblock the Notifications









