இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரப்போகுதா! மாருதி, ஹூண்டாய்க்குலாம் இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் இந்த கார் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இல்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

எனினும் ரெனால்ட் டஸ்டர் காரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்து கொண்டுள்ளது. ஆம், ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடலை, வரும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது ஐசிஇ (ICE - Internal Combustion Engine) மாடல் ஆகும். இப்படிப்பட்ட சூழலில், ரெனால்ட் டஸ்டர் காரின் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பதுதான் அது. இந்த தகவல் ரெனால்ட் நிறுவனத்தால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Renault Duster

எனினும் ரெனால்ட் டஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட் நிறுவனம் ஆரம்பத்தில் 10 லட்ச ரூபாய் விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இதுதான் இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் தற்போது அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக டஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை, இந்திய சந்தைக்கான தனது முதல் எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Renault Duster Dashboard

இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) மற்றும் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், ரெனால்ட் டஸ்டர் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். இதன் டிரைவிங் ரேஞ்ச் அனேகமாக 400 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஐசி இன்ஜின் மாடல் வரும் 2025ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. அதை தொடர்ந்து இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் 2026ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை எல்லாம் ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. ஆனால் இது தொடர்பான ரெனால்ட் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காமல், மவுனம் காத்து வருகிறது. எனினும் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஐசி இன்ஜின் மாடல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகிய இரண்டுமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம். அதற்கு ரெனால்ட் நிறுவனம் விலை நிர்ணயத்தை சரியாக செய்வது மிகவும் முக்கியமானது.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 23:51 [IST]
English summary
Renault considering duster ev for india all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+