இந்தியாவே இந்த காருக்காக தான் வெயிட்டிங்! ரெனால்ட் டஸ்டர் கார் எப்ப வருது தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது டஸ்டர் காரை களம் இறக்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த கார் குறித்த சில முக்கியமான அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த காரின் வடிவமைப்பு விலை இந்த காலில் உள்ள அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைக்கப்பட்டுள்ளன இதன் அடிப்படையில் தான் மூன்றாம் தலைமுறை டஸ்டர் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்காக பலர் காத்திருக்கும் நிலையில், இந்த காரில் அப்படி என்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விபரங்களை காண்போம்.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை டஸ்டர் காரை இந்திய மார்க்கெட்டில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான டேஸிகா நிறுவனத்தின் பேட்ஜில் இந்த கார் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் ஆகிவிட்டது.

renault duster

சர்வதேச மார்க்கெட்டில் டேஸிகா பிராண்டில் அறிமுகமான இதே கார் தான் இந்திய மார்க்கத்திற்கும் சில மாற்றங்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக இந்திய மார்க்கெட்டுக்கு வரவுள்ள டஸ்டர் கார் என்ன விதமான மாற்றங்களுடன் இந்தியாவிற்கு வரப் போகிறது? எதை எல்லாம் எதிர்பார்க்கலாம்? என்ற விரிவான தகவலை தான் இங்கே காணப் போகிறோம்.

நாம் முன்னரே சொன்னபடி டேஸிகா நிறுவனத்தின் பிக்ஸ்டர் தான் புதிய தலைமுறை டஸ்டர் காராக இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த கார் பாக்ஸி ஸ்டைலில் உருவாக்கப்படுகிறது. இதில் ஸ்லீக்கான ஹெட்லைட்டுகள் பெரிய ஏர் டேம் வட்டமான ஃபாக் லேம்ப்கள் ஆகிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

renault duster

இது போக இந்த காரின் முன்பக்கம் உள்ள கிரில் பகுதியில் ரெனால்ட் என்ற நிறுவனத்தின் பெயர் பெரிதாக எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 18 இன்ச் கொண்ட டூயல் டோன் அலாய் வீல்கள் வடிவிலான வீல் ஆர்ச்கள், ரூப் ரெயில்கள், சி பில்லரில் கொடுக்கப்பட்டுள்ள டோர் ஹேண்டில்கள், பின்பக்கம் பெரிய ஸ்கிட் பிளேட் மற்றும் ஒய் வடிவ எல்இடி டெயில் லைட்டுகள் எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக 10.1இன்ச் கொண்ட டச்ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக 7இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6ஸ்பீக்கர் கொண்ட ஆர்கேவி சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ்கண்ட்ரோல் அம்சங்களும் இந்த காரில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.

renault duster

இதுபோக சென்ட்ரல் கன்சோல் பகுதியில் ஏசி வென்ட்கள் மற்றும் அதற்கான கண்ட்ரோல் பட்டன்கள் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கண்ட்ரோல் பட்டன்கள் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. காரில் செல்போன் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்ய 12 வோல்ட் சாக்கெட்கள் மற்றும் இரண்டு டைப் சி சார்ஜிங் போர்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் நீண்ட தூரம் செல்லும் போதும் செல்போனில் சார்ஜ் காலி ஆகிவிடும் என்று கவலை இல்லை.

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனையாகும் இந்த காரில் பல்வேறு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக இதில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்க 1.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்துடனும் இயங்குகிறது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் ஆக 1.2லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இயங்குகிறது. இது 130பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக 1.0லிட்டர் பெட்ரோல் எல்பிஜி ஆப்ஷன் இன்ஜினும் இருக்கிறது. இந்த காரில் ஐந்து விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் ஸ்னோ,ஆட்டோ, ஆஃப் ரோடு, எக்கோ மற்றும் மட் ஆகிய டிரைவ் மோடுகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனத்தின் இந்த டஸ்டர் கார் இந்தியாவில் வந்த பிறகுதான் எஸ்யூவி கார்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை வந்தது என சொல்லலாம். துவக்கி வைத்த இந்த கார் தற்போது விற்பனையில் இல்லாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் மீண்டும் இந்த கார் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய விற்பனையை பெறும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 12:37 [IST]
English summary
Renault duster 2025 launch price design features
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X