இந்தியாவே எதிர்பார்த்த டஸ்டர் கார் அடுத்த வாரம் அறிமுகமாகுது! இதுல என்னலாம் இருக்குது தெரியுமா?
இந்தியாவில் பிரபலமான ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் தற்போது விற்பனையில் இல்லாத நிலையில், மீண்டும் இந்த காரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் டேஷிக்கா என்ற நிறுவனம் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் காரை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியான நிலையில், இந்த காரின் அறிமுகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டஸ்டர் கார் இந்தியாவில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் எஸ்யூவி மார்க்கெட்டிற்கான புது டிரெண்டையே உருவாக்கி வைத்தது என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்திய கார் பல்வேறு காரணங்களுக்காக விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த காரை மீண்டும் கொண்டு வருவது குறித்து அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச அளவில் ரெனால்ட் குடும்பத்திலிருந்து டேஸிக்கா என்ற நிறுவனம் இந்த டஸ்டர் காரை மறுவடிவமைப்பு செய்து பிக்ஸ்டர் என்ற பெயரில் 7 சீட்டர் கொண்ட எஸ்யூவி காராக உருவாக்கியுள்ளது. இந்த காரை நிறுவனம் தற்போது பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை செய்யும் புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அதிக பிராக்டிகல் அம்சங்களுடன் ரக்கடான லுக்கை கொண்டுள்ள இந்த கார் குடும்பங்களுடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உலக அளவிலான வெளியிட்டிற்க்கு அந்நிறுவனம் தயாராகி வருகிறது. இது குறித்த டீசர் தற்போது வெளியாகி உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி அக்டோபர் மாதம் 14-20ம் தேதி வரை பாரீஸில் நடக்கும் மோட்டார் ஷோ கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டேஸிகா நிறுவனம் இந்த பிக்ஸ்டர் காரை ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்துள்ளது. இதன் முன்பக்கம் உள்ள ஹெட்லைட், பெயில்லைட், முன்பக்க கிரில், ஃபென்டர், உள்ளிட்ட பகுதிகளெல்லாம் டஸ்டர் காரில் எப்படி வடிவமைக்கப்பட்டிருந்ததோ அதே போலவே இந்த காரில் வடிவமைத்துள்ளார்கள். இந்த காரில் வீல் பேஸ் அதிகமாக வடிவமைத்துள்ளார்கள். இதனால் மூன்றாவது வரிசை சீட்டுக்கு போதுமான இட வசதி இருக்கிறது.
இந்த பிக்ஸ்டர் காரின் பின்பக்கம் ஓய்வடிவ எல்இடி டெயில் லட் வழங்கப்பட்டுள்ளன. இது பிக்ஸ்டர் கான்செப்ட் காரில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்ட வடிவமைப்பாக இருக்கிறது. மேலும் புகைப்படங்களின் மூலம் இதன் டேஷ்போர்டு புகைப்படங்கள் வெளியானது. இது பார்ப்பதற்கு டஸ்டர் காரில் உள்ள டேஷ்போர்டு போலவே இருக்கிறது. மேலும் இந்த காரின் உட்பக்கம் 10.1 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவும் 7 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

பிக்ஸ்டர் காரில் உள்ள கண்ட்ரோல்கள் எல்லாம் டஸ்டர் காரின் உள்ள கண்ட்ரோல்களை இன்ஸ்பயர் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிமியம் அம்சங்கள் இதில் இடம் பெறுகிறது. முக்கியமாக இந்த காரின் அளவுகள் மற்றும் எடையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் அதிக பவர் கொண்ட இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் டாப் வேரியண்டில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆஃப்-ரோடு அம்சங்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த காரில் பயணம் செய்ய ஏற்றதாக இருக்கும். அதே நேரம் அனைத்து கால சூழ்நிலைகளிலும் இந்த கார் சிறப்பாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கார் இந்தியாவிற்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேஸிகா நிறுவனம் தனது பிக்ஸ்டர் காரை சிஎம்எஃப்-பி பிளாட்ஃபார்மில் உருவாக்குகிறது. இதன் இன்ஜின் மற்றும் கியர் எல்லாம் டஸ்டர் காரில் இருப்பது போலவே இந்தியாவிலும் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் டிசிஇ 100 இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளன. இதுபோக 1.2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜினும், 1.6 லிட்டர் ஹைபிரிட் இன்ஜினும் பொருத்துவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் காரின் வருகைக்காக இந்தியர்கள் பல காத்திருக்கிறார்கள். இது விற்பனைக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட டஸ்டர் கார் இந்தியாவிற்கு எப்பொழுது வரும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications









