டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!

இந்தியர்கள் மத்தியில் இப்போதும் டீசல் காருக்கு மிகுந்த வரவேற்புக் காணப்படுகின்றது. இதனால்தான் இந்தியாவில் இப்போதும் டீசல் கார்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அதுதவிர, இன்றைக்கும் டீசல் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக இன்றைய தினம் (ஏப்ரல் 16) மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ பிளஸ் (Mahindra Bolero Neo+) கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த கார் மாடலில் டீசல் ஆப்ஷனை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து இருக்கின்றது. மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்கள் முழுக்க முழுக்க பெட்ரோல் கார் விற்பனைக்கு மாறி இருக்கின்ற இந்த சூழலிலேயே மஹிந்திரா டீசல் ஆப்ஷனை புதிய பொலிரோ நியோ பிளஸ் அறிமுகம் செய்திருக்கின்றது.

Renault duster

இதற்கு டீசல் கார்களுக்கு இப்போதும் இந்தியர்கள் மத்தியில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதே காரணமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே ரெனால்ட் (Renault) நிறுவனம் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் புதிய கார் மாடல் ஒன்றில் பெட்ரோல் எஞ்சின் (Petrol Engine) ஆப்ஷனை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

இதன் வாயிலாக மற்ற நிறுவனங்களைப் போல இந்த நிறுவனம் டீசல் ஆப்ஷனில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. ரெனால்ட் நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் டஸ்டர் (New Gen Duster) காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதிலேயே வெறும் பெட்ரோல் ஆப்ஷனை மட்டுமே அந்நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிகப் பெரிய ஈர்த்துக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றே புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் ஆகும். இது இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அது பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டர்போ பெட்ரோல் ஆப்ஷனிலேயே டஸ்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இரண்டு விதமான பெட்ரோல் டர்போ மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ரெனால்ட் மற்றும் நிஸான் (Nissan) இரு நிறுவனங்களும் கூட்டணியின்கீழ் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்த வரவிருக்கும் டஸ்டரை தழுவிய மாடலை நிஸானும் விற்பனைக்குக் கொண்டு வரும்.

அதிலும், அதே இரண்டு விதமான டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், டஸ்டரில் இருந்து லேசான மாற்றங்களைப் பெற்ற நிலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களே வரவிருக்கும் புதிய ரெனால்ட் டஸ்டர் மற்றும் அதை தழுவி நிஸான் நிறுவனத்திற்காக தயார் செய்யப்பட இருக்கும் கார் மாடலிலும் வழங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர பிரீமியம் தர அம்சங்கள் பலவும் இந்த கார் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 7அங்குல விர்சுவல் டேஷ்போர்டு, 10.1 அங்குல தொடு திரை மல்டி மீடியா சிஸ்டம் உள்ளிட்டவை அந்த கார்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுபோன்று இன்னும் பல நவீன கால அம்சங்கள் இந்த கார்களில் கிடைக்கும் என இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் காருக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த காரை வெறும் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இது டீசல் கார் பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 22:07 [IST]
English summary
Renault duster come with only turbo petrol engine options
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+