ரெனால்ட் டஸ்டர் கார் இந்தியாவுக்கு வர ரெடியாகிடுச்சு! இதுல இப்ப என்ன ஸ்பெஷல் தெரியுமா?

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது சர்வதேச அளவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் வரும் 2025ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மிட் சைஸ் எஸ்யூவி கார் டஸ்டர் என்ற பெயரிலும், இதே கார் நிஸான் பிராண்டில் வேறு ஒரு பெயரிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் பேட்டில் வெளியாகும் மிட் சைஸ் காருக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் இந்த கார் குறித்த சில முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு டஸ்டர் என்ற காரை இந்தியாவில் உருவாக்கியது. இந்த கார் அறிமுகமானது பிறகு இந்தியாவில் எஸ்யூவி கார்கள் மீது மிகப்பெரிய மோகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த காரின் வடிவமைப்பு மக்களுக்கு அதிகம் பிடித்திருந்தால் இந்த காரை அதிகம் வாங்கினார்கள். மக்கள் பலருக்கு பிடித்த காராக இந்த கார் இருக்கிறது.

renault duster india

கடந்த 2022ம் ஆண்டு இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் மாசு கட்டுப்பாடு விவகாரத்தில் அரசு விதித்த விதிமுறையை பின்பற்ற முடியாததால் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரெனால்ட் நிறுவனம் இந்த காரை முழுவதுமாக அப்டேட் செய்து முற்றிலும் புதிய தலைமுறை டஸ்டர் காராக இந்தியாவில் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.

வீட்டிலேயே சர்வதேச அளவில் இந்த டஸ்டர் கார் 7 சீட்டர் காராக உருவாக்கப்பட்டு சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே விற்பனையாகி வந்த காரை விட தற்போது இந்த கார் பெரிய காராக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த கார் 4.6 மீட்டர் நீளம் கொண்ட காராக இருக்கிறது. விரைவில் இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

renault duster india

இதனால் இந்த காரல் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இந்த காரில் அடாஸ் தொழில்நுட்பம் இருக்கும். இதுபோக பாதுகாப்பு அம்சங்களும் அதிகம் இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் இது தொழில்நுட்ப வசதிகளை எல்லாம் உருவாக்கும் காரை தயாரிப்பதில் பெயர் பெற்ற பிளாட்பார்மாக இருக்கிறது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது. முக்கிய மாற்றமாக மூன்றாவது வரிசை சீட் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இது 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. 1.6லி பெட்ரோல் இன்ஜினுடன் இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இந்த கார் உருவாக்கப்படுவதால் அதிக மைலேஜ் வழங்கும் காராக இருக்கலாம்.

renault duster india

இந்த காரின் விலையை பொருத்தவரை இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூபாய் 14 லட்சம் முதல் 18 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகி வரும் கியா கேரன்ஸ், ஹூண்டாய் அல்கஸார், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் முன்னரே சொன்னது படி இந்த ஒரே மெசேஜ் எஸ்யூவி கார் ரெனால்ட் பிராண்டில் டஸ்டர் காராகவும், நிஸான் பிராண்டில் வேறொரு காராகவும் விற்பனைக்கு வருகிறது. இதில் நிஸான் பிராண்டில் வெளியாகும் கார் தான் மார்க்கெட்டில் அதிக அம்சம் கொண்ட அதிக விலை கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டஸ்டர் கார் மக்கள் விரும்பும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காராகவும், அதே நேரம் நிஸான் கார் அதிக அம்சங்கள் மற்றும் அதிக வசதிகள் நிறைந்த காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான காராகவும் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த கார் பிரிமியம் ரக காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்த காரை தயாரிப்பதால் இரண்டு செக்மென்ட் மக்களையும் திருப்தியாகும் வகையில் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வருவதற்காகவும், ஒரு வாகனத்தின் வாடிக்கையாளர் மற்றொரு வாகனத்தின் போட்டி வாடிக்கையாளராக இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவும் இரண்டும் வேறு வேறு செக்மென்ட் வாடிக்கையாளர்களை டார்கெட் செய்த கார்களாக உருவாக்க திட்டமிட்டு இந்த ஏற்பாடு செய்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது பெரிய அளவில் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய விட்டாலும் எதிர்காலத்தில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய திட்டமெல்லாம் இருக்கிறது. இதெல்லாம் வரிசையாக செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் நிச்சயம் டாடா, மாருதி, ஹுண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 10:37 [IST]
English summary
Renault duster india launch new features special
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X