இந்த கார் திரும்பவும் விற்பனைக்கு வரப்போகுதா... தம்பி கேட்ட மூட்றா... அலறும் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள்...

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது விற்பனையில் இல்லை. இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கூடிய விரைவிலேயே ரெனால்ட் டஸ்டர் கார் இந்தியாவில் 'கம்பேக்' கொடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக ரெனால்ட் டஸ்டர் கார் உலகளாவிய அளவில் தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

2025 Renault Duster

வெளிப்புற டிசைனை (Design) பொறுத்தவரையில், முரட்டுத்தனமான எஸ்யவி காராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, முன் மற்றும் பின் பக்க டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 'Y' வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் 'Y' வடிவ எல்இடி டெயில்லைட்கள் ஆகிய அம்சங்களை இந்த காரில் நம்மால் பார்க்க முடிகிறது.

இவை தவிர முரட்டுத்தனமான முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், ரூஃப் ஸ்பாய்லர், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் மற்றும் வீல் ஆர்ச்சுகள் ஆகிய அம்சங்களும் கவனம் ஈர்க்கின்றன. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சமில்லை.

2025 Renault Duster Side Design

இதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதுதவிர புதிய ஸ்டியரிங் வீல் மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய அம்சங்களையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் பெற்றுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள மாடல்களில், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட், 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின்கள் ஆகும்.

ஆனால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள மாடலில், 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் ஆகிய ஆப்ஷன்கள்தான் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகைய, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

இதுதவிர டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுடனும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 13, 2024, 18:20 [IST]
English summary
Renault duster new gen globally unveiled design features engine options
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+