ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!

ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் மீது இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்த கார் இந்தியாவில் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி மக்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் இந்த கார் இந்தியாவில் வருவது உறுதியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கியவுடன் முதல் காராக டஸ்டர் காரை அறிமுகப்படுத்தியதும் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது என்று சொல்லலாம். மக்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்கள் மீது மவுசு வருவதற்கு இந்த கார் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த கார் தற்போது விற்பனையில் இல்லை. இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்றும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

Renault Duster

இந்நிலையில் சர்வதேச அரங்கில் டஸ்டர் காரை மீண்டும் மேம்படுத்தி புதிய அப்டேட்களுடன் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதன்படி ரெனால்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டேசிகா நிறுவனம் கடந்த ஆண்டு டஸ்டர் காரை தனது பிராண்டில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை டஸ்டர் கார் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமானது.

இந்த கார் இந்தியாவிற்கு வருவது குறித்த முக்கியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து ஆலையமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியாவிற்கு இந்த டஸ்டர் கார் வரும்போது ரெனால்ட் பிராண்டிலும் அதே நேரத்தில் நிஸான் பிராண்டில் வேறு பெயர் கொண்ட காராகவும் விற்பனைக்கு வரும்.

Renault Duster

இதன்படி டஸ்டர் கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும்போது 5 சீட்டர் வெர்ஷனாகவும் 7 சீட்டர் வெர்ஷனாகவும் இரண்டு விதமான காராகவும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. இந்த இரண்டு காரும் நிஸான் பேட்ஜில் வேறு பெயரில் விற்பனைக்கு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த இரு கார்கள் போக தனியாக அடுத்து இரு கார்களும் இந்தியாவிற்கு கொண்டுவர இந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு வரவுள்ள ரெனால்ட் டஸ்டர் காரின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இரண்டு கார்களின் முன்பக்கம் இடம் பெற்றுள்ளது. இதில் ஒன்று ரெனால்ட் நிறுவனம் வெளியிடும் டஸ்டர் என்ற காரின் முகப்பு பக்கமும், அதன் நிஸான் வெர்ஷன் காரின் முகப்பு பக்கமும் இடம்பெற்றுள்ளது.

Renault Duster

இதன் முகப்பு பக்கத்தை பார்க்கும்போது சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் புதிய தலைமுறை டஸ்டர் கார் போல தான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெட் லைட்டுகள், முன்பக்க பம்பர் மற்றும் டிசைன்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி சர்வதேச காரின் லுக் இந்திய காரிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் பிராண்டில் உள்ள காரில் எல் வடிவ டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. முழு நீள எல்இடி லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. சி-வடிவ ஃபாக் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ரெனால்ட் டஸ்டர் காரின் முன் பக்கம் ரக்கடான லுக்கில் இருக்கிறது. அதுவே நிஸான் காரின் முகப்பு பக்கம் என்பது கொஞ்சம் ஃப்யூச்சரிஸ்டிக் லுக் உடன் இருக்கிறது.

Renault Duster

ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் வெளியிடப் போகும் இந்த 5 சீட்டர் எஸ்யூவி கார் சிஎம்எஃப்பி பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மார்க்கெட்டில் தயாராகும் கார் இதில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும்போது ஹுண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 5சீட்டர் கார் மட்டும் இல்லாமல் டஸ்டர் காரிலேயே 7 சீட்டர் வெர்ஷன் காரையும் வெளியிட ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக காரை தயார் செய்து சர்வதேச அளவில் சோதனை செய்யவும் ரெனால்ட் நிறுவனம் துவங்கி விட்டது. இந்த காரை சர்வதேச அளவில் பிக்ஸ்டர் என அழைக்கிறார்கள். இந்த 7 சீட்டர் வெர்ஷன் காரிலும் நிஸான் பேட்ஜ் கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு வரும்போது தற்போது மார்க்கெட்டில் உள்ள டாடா சபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் அல்கஸார், ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 7 சீட்டர் டஸ்டர் காரின் லுக் என்பது அதன் 5 சீட்டர் லுக்கில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அப்படியே கொண்டிருக்கும். இது போக கூடுதலான நீளம் மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் இந்த டஸ்டர் கார் அறிமுகம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி சர்வதேச அரங்கில் 5 சீட்டர் டஸ்டர் கார் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த கார் இந்தியாவிற்கு 2025-ம் ஆண்டு இறுதியில் தான் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரெனால்ட் டஸ்டர் கார் விற்பனைக்கு வரும்போது அதன் நிஸான் பேட்ஜ் காரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது மட்டுமல்ல 5 சீட்டர் கார் விற்பனைக்கு வந்து அடுத்த ஒரு சில மாதங்களுக்குப் பிறகு 7 சீட்டர் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மற்ற இரண்டு தயாரிப்புகளை நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து செய்து வருகின்றன. இது எலெக்ட்ரிக் காராக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2024, 15:16 [IST]
English summary
Renault duster teased india launch nissan version coming soon
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X