ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு மெல்ல அதிகரித்து வருகிறது என்றால் ஒரு நத்தை நகரும் அளவிற்கு மெல்ல அதிகரித்து வருகிறது. ரெனால்ட் நிறுவனம் ஒரு காலத்தில் மாதம் குறைவான கார்கள் மட்டுமே விற்பனை செய்த நிலையில், இப்பொழுது மாதம் ஆயிரம் கார்களுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ரெனால்ட் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள் என்றாலும், விற்பனை மற்ற போட்டி நிறுவனங்கள் வெளியிடும் கார்களின் விற்பனைக்கு ஈடாக இல்லை. மிக மெதுவாக தான் வளர்ந்து வருகிறது.

Renault Kiger sales march 2024

இந்நிலையில் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. தற்போது ரெனால்ட் நிறுவனத்தில் க்விட்,ட்ரைபர்,கைகர் ஆகிய மூன்று விதமான கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இதில் கைகர் காரின் விற்பனை தான் கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் பெரும் 1050 கார்கள் தான் விற்பனையாகிய இருந்தன.

இந்த காரின் கடந்த 6மாத விற்பனை விபரங்களை பார்க்கும்போது நமக்கு சில ஆச்சரியமான தகவல் ஒன்று கிடைத்தது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 912கார்களும், நவம்பர் மாதம் 530கார்களும், டிசம்பர் மாதம் 865கார்களும், ஜனவரி மாதம் 750கார்களும், பிப்ரவரி மாதம் 1,047கார்களும், மார்ச் மாதம் 1,050கார்களும் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆறு மாதத்தில் மொத்தமே 5154 கார்கள் தான் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

Renault Kiger sales march 2024

இந்த விற்பனை எண்ணிக்கையை பார்க்கும் போது இந்த காரின் விற்பனை மந்தமாகி கொண்டே இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆறு மாதத்திற்கு முன்னர் இருந்த விற்பனையை விட தற்போது விற்பனை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் என்ன வேகத்தில் அதிகரித்துள்ளது என்பதை பார்த்தால் ஆமை வேகத்தில் தான் அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை என்பது மாதத்திற்கு சராசரியாக 859 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆறு மாதத்தில் இருப்பதிலேயே குறைவான விற்பனையை விட அதிகமான விற்பனைக்கு இடையில் வெறும் 364 கார்கள் தான் உள்ளன. இந்த காரை மக்கள் விரும்பி வாங்குவதில் சில தயக்கங்கள் காட்டி வருகிறார்கள் என்பது இதன் மூலம் நமக்கு தெரிகிறது.

Renault Kiger sales march 2024

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின்கள் எக்ஸ்ட்ரானிக்ஸ் சிவிடி மற்றும் 5 ஸ்பீடு இசிஆர் ஏஎம்டி ஆகிய கியர் பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கியர் பாக்ஸ்கள் ரைடர்களுக்கான டிரைவிங் அனுபவத்தை சொகுசாக மாற்றுகிறது என அந்நிறுவனம் கூறுகிறது.

குறைவான விலையில் விற்பனையாகி வரும் கார்களில் இந்த கார் ஒன்றாக இருக்கிறது. இந்த காரில் உள்ள 1.0லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் 20.62கிலோமீட்டர் மைலேஜ் தருவதால் பலர் இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள். இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை காரின் உட்பகுதியில் 8இன்ச் கொண்ட டச்ஸ்கிரீன் போட்டு இருக்கிறது. இதுபோக எல்இடி ஹெட்லைட், ஹை சென்டர் கன்சோல், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் இந்த கார் 4 ஸ்டார்களை பெற்ற காராக இருக்கிறது. மேலும் இந்த காரில் உள்ள ஏர்பேக்குகளை பொருத்தவரை நான்கு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இம்பேக்ட் சென்சிங் டோர் லாக், ஸ்பீடு சென்சிங் டோர் லாக் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இருக்கிறது.

இதுபோக கார் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம் உள்ள அம்சங்களும் இந்த காரில் இருக்கின்றன. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 11.23 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக வாகனம் வாங்கும் போது அதன் விலை பாதுகாப்பு அம்சங்கள் காரில் உள்ள வசதிகள் ஆகிய மூன்று விஷயங்கள் தான் மிக முக்கியமாக பார்க்கப்படும். இந்த காரைப் பொறுத்தவரை குறைந்த விலையில் நல்ல பாதுகாப்பு ரேட்டிங் மற்றும் அதிக அம்சங்கள் நிறைந்த காராக இருந்தாலும், இதன் விற்பனை குறைவாக இருக்கிறது. இதற்கான காரணம் தெரியாமல் தான் அந்நிறுவனமே தவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 18, 2024, 12:22 [IST]
English summary
Renault kiger sales march 2024 1050 units
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X