இந்த காரோட விலை ரொம்ப கம்மி தான்! ஆனா ஒரு ஆளு கூட இதை வாங்கல பாருங்களேன்!

இந்தியாவில் குறைந்த விலை கார்கள் என்றால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். சிறப்பான விற்பனை இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனையாகி வரும் குறைந்த விலை கார் ஒன்றை வெளிநாட்டில் யாருமே வாங்காத மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் அந்த காரின் விற்பனை சரீவை சந்தித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களுக்கு குறைந்த விலை கார்கள் மீது தனி மவுசு இருக்கிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான கார்கள் இந்த செக்மெண்டில் தான் விற்பனையாகி வருகிறது. மாருதி நிறுவனம் இந்த செக்மென்டை பிடித்து இதில் பல்வேறு கார்களை அறிமுகப்படுத்தியதால் தான் அந்நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

renault kwid export

இந்நிலையில் இந்தியாவில் விற்பனையாகி வரும் குறைந்த விலை கார்களில் மிக முக்கியமான கார் என்றால் அது ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார் தான். இந்த கார் இந்தியாவில் ரூபாய் 4.69 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த காரின் சிறப்பான வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் இந்த காருக்கு நல்ல பெயரை எடுத்து தந்தது.

என்னதான் இந்த காருக்கு பல்வேறு பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தாலும் இந்த காரின் விற்பனை நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே தான் வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த கார் மிக மோசமான சூழ்நிலையை எட்டி உள்ளது. இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலேயே விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

renault kwid export

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு க்விட் கார் கூட வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகவில்லை. இது மக்கள் மத்தியில் இந்த காரின் மீது குறைந்து வரும் மோகத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூட 45 க்விட் கார்கள் வெளிநாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் தான் இந்த சூழ்நிலை என்றால் இந்தியாவில் இந்த காரின் நிலைமை மிக மோசமாக தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தமே 977 கார்கள் மட்டுமே இந்தியா மார்க்கெட்டில் விற்பனையாகி உள்ளன. இது இதே செக்மெண்டில் உள்ள மற்ற கார்களின் விற்பனையை ஒப்பிடும்போது மிகக் குறைவான விற்பனையாகும் ஆயிரம் பேர் கூட இந்த காரை வாங்கவில்லை என்பது மோசமான அறிகுறியாக இருக்கிறது.

renault kwid export

ரெனால்ட் க்விட் காரை பொருத்தவரை 999 சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்ச 68 பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீளத்தை பொருத்தவரை 3631மிமீ நீளமும், 184 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இருக்கிறது.

இந்த காரின் சிறப்பு அம்சமே அது காரில் உள்ள பூட் வசதி தான் இந்த காரில் மொத்தம் 279லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் ஐந்து விதமான விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 8இன்ச் டச் ஸ்கிரீன் மீடியாநேம் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த டச் ஸ்கிரீன் மீடியாநேம் சிஸ்டம் பொருத்தப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் கார் இது மட்டும் தான்.

அது மட்டுமல்லாமல் என்ட்ரி லெவலில் கார் வாங்கும் பலர் ஆட்டோமேட்டிக் கியர் வேரியன்ட் கார்களை விரும்புகிறார்கள். புதிதாக கார் ஓட்டுபவர்கள் இந்த ஆப்ஷனை விரும்புவதால் இந்நிறுவனம் தனது ஆர்எக்ஸ்எல்(ஓ) வேரியன்டில் ஈஸி ஆர் ஏஎம்டி என்ற வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்தியாவில் விற்பனையாகும் குறைந்த விலை ஆட்டோமேட்டிக் காராகவும் இந்த கார் தான் இருக்கிறது.

இதுபோக இந்த காரில் அனைத்து சீட்டுகளுக்குமான சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட 14 பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த செக்மெண்டில் உள்ள கார்களிலேயே அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட காராக இது தான் இருக்கிறது. இருந்தாலும் கிராஷ் டெஸ்ட் சோதனையில் இந்த கார் மிக மோசமான ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இஎஸ்பி, டிராக்சன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து பயணிகளுக்குமான சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு அம்சங்கள் இருந்தும், இந்த காரை மக்கள் விரும்பாததற்கு காரணம் இந்த கார் பெற்ற சேஃப்டி ரேட்டிங்கும் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனத்தின் ரெனால்ட் கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தாலும் இந்த காரில் நவீன அப்டேட்டுகள் இல்லை என்பதும் மேலும் மோசமான சேஃப்டி ரேட்டிங் ஸ்டார்களை பெற்றதும் இந்த காரின் விற்பனை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இருந்தாலும் சிட்டி பயன்பாட்டிற்கு இது சிறந்த கார் தான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 7:00 [IST]
English summary
Renault kwid export zero unit april 2024
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X