ரெனால்ட் களமிறக்கிய ஸ்பெஷல் எடிசன் மாடல்கள்! பாத்த உடனே வாங்கணும்னு தோணுதே! விலை உண்மையா இவ்ளோதானா!
இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகிய 3 கார்களிலும், நைட் & டே எடிசன் (Night & Day Edition) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த லிமிடெட் எடிசன் மாடல்களை விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. லிமிடெட் எடிசன் மாடல்கள் என்பதால், ஒட்டுமொத்தமாக 1,600 பேருக்கு மட்டுமே இவை விற்பனை செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதில் ரெனால்ட் க்விட் நைட் & டே எடிசன், அதன் RXL (O) வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் கார்களின் நைட் & டே எடிசன் மாடல்கள், அவற்றின் RXL வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் நிறுவனத்தின் இந்த 3 கார்களின் நைட் & டே எடிசன் மாடல்களிலும், பியர்ல் ஒயிட்/பிளாக் ரூஃப் பெயிண்ட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் க்விட் நைட் & டே எடிசன் மாடலில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
மறுபக்கம் ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபர் கார்களின் நைட் & டே எடிசன் மாடல்களில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
எந்த வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதில் இடம்பெற்றுள்ள இன்ஜின் ஆப்ஷன்தான், நைட் & டே எடிசன் மாடல்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த 3 கார்களின் நைட் & டே எடிசன் மாடல்களிலும், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது.
லிமிடெட் எடிசன் மாடல்கள் என்பதால், விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ரெனால்ட் நிறுவனம் விலையை சிறிய அளவில் மட்டுமே உயர்த்தியுள்ளது. இந்த லிமிடெட் எடிசன் மாடல்களின் விலை எவ்வளவு? என்பது உள்பட அனைத்து தகவல்களையும், மேலே உள்ள வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது மஹாபலிபுரத்தில் இருந்து உங்களுக்காக நாங்கள் வழங்கியுள்ள நைட் & டே எடிசன் மாடல்களின் எக்ஸ்க்ளூசிவ் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஆகும்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய கார்களை வாங்க நினைப்பவர்கள் ரெனால்ட் க்விட், ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் கார்களின், நைட் & டே எடிசன்களை பரிசீலனை செய்யலாம். 1,600 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை இங்கே கவனத்தில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








