தரை ரேட்டுக்கு இந்த கார் விற்பனையானாலும் வாங்க ஆளே கிடையாது! ஏன் தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் தனது குறைந்த விலை காரான க்விட் காரை ஆயிரம் கார்கள் கூட விற்பனை செய்ய முடியாமல் திணறிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது. ரெனால்ட் க்விட் கார் குறைவான விலையில் விற்பனையானாலும், அந்த காரை அதிக நபர்கள் வாங்கவில்லை என்பதற்கான காரணம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ரெனால்ட். இந்நிறுவனம் இந்தியாவில் தனது காலடித்திடத்தை பதித்து கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் டஸ்டர் என்ற காரை முதன்முதலாக அறிமுகப்படுத்திய போது எஸ்யூவி என்ற மார்க்கெட்டையே திறந்து விட்ட கார் இது என சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருந்தது. இந்த காரை ஏராளமான மக்கள் விரும்பி வாங்கி வந்தார்கள்.

renault kwid sales feb 2024

தற்போது அந்நாட்டு நிறுவனத்திடம் பெரிய அளவில் கார்கள் இல்லை . க்விட் டிரைபர் மற்றும் கைகர் ஆகிய கார்களை மட்டுமே தற்போது ரெனால்ட் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் குறிப்பிட்ட காலம் தான் குறைந்த விலை காராக இருக்கிறது. இந்த கார் தான் என்ட்ரி லெவெலில் கார் வாங்க நினைக்கும் பலர் வாங்கும் காராக இருக்கிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனையான கார்களில் மாருதி நிறுவனம் தயாரித்த வேகன்ஆர் என்ற கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 19,412 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் வேகன்ஆர் கார் 14.94% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 14வது இடத்தில் தான் க்விட் கார் இருக்கிறது.

renault kwid sales feb 2024

கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் ரெனால்ட் நிறுவனம் வெறும் 828 கார்களை மட்டுமே விற்பனை செய்து உள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1758 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது அதைவிட கிட்டத்தட்ட 1000 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. ரெனால்ட் க்விட் கார் தற்போது விற்பனையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

ரெனால்ட் நிறுவனத்தில் மிகக் குறைந்த விலை காராக இந்த க்விட் கார் தான் இருக்கிறது. தற்போது இந்த கார் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகின்றன. மொத்தம் 5 சீட்டர் கொண்ட காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்த காரின் இன்ஜினைப் பொறுத்தவரை 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

renault kwid sales feb 2024

இந்த இன்ஜினின் பவரை பொருத்தவரை 68பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஹைஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்ட இன்ஜினாக இருக்கிறது. இந்த கார் சிறிய ரக கார் என்பதால் இந்த காரின் இன்ஜின் பவர் மற்றும் டார்க் திறன் குறைவாக தான் உள்ளன.

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 8 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. இதுபோக மேனுவல் ஏசி வயர்லெஸ் சார்ஜர் எல்இடி கேபின் லேம்ப் ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையை பொறுத்தவரை ரூபாய் 4.70 லட்சம் முதல் ரூபாய் 6.45 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் தற்போது விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் ஆகும் போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிற்கு நம்பிக்கை ஏற்பட்டது. தரமான தயாரிப்புகளை எல்லாம் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நிறுவனத்திலும் குறைவான கார்களே உள்ளன. மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கை மீண்டும் வர அதிகமான தரமான தயாரிப்புகளை அந்நிறுவனம் வெளியிட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 18:04 [IST]
English summary
Renault kwid sales feb 2024 only 828 units
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X