ஐரோப்பிய சந்தையில இது புலி... உலக புகழ்பெற்ற இந்த காரை ரெனால்ட் இந்தியா கொண்டு வந்தது எதற்கு தெரியுமா?

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. ரெனால்ட் (Renault) நிறுவனம் அதன் சார்பில் விரைவில் ஓர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அது, அதன் க்விட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'க்விட் இவி' (Kwid EV) எலெக்ட்ரிக் காரையே அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற மீகேன் இ-டெக் (Renault Megane E-Tech) எனும் எலெக்ட்ரிக் இந்தியாவில் அதன் தரிசனத்தை வழங்கி இருக்கின்றது.

Renault megane e-tech spied

இந்த கார் இந்தியாவில் காட்சியளிப்பது இதுவே முதல் முறையாகும். கார் நிறுத்தத்தில் மற்ற கார்களுக்கு நடுவில் அந்த கார் கெத்தாக நிற்பதை நம்மால் காண முடிகின்றது. இதுகுறித்த படங்களே தற்போது வெளியாகி மின்சார வாகன காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது.

ரெனால்ட் மீகேன் இ-டெக், மிகவும் கவர்ச்சியான தோற்றம், தனித்துவமான ரெனால்ட் லோகோ, பச்சை நிற நம்பர் பிளேட், முற்றிலும் மாறுபட்ட ஹெட்லைட் மற்றும் டிஆர்எல்கள் ஆகிய சிறப்புகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. வெளிப்புறத் தோற்றத்தில் இந்த கார் பயன்பாட்டு வசதிகளிலும் மிக சிறந்ததாக இருக்கும்.

Renault megane e-tech rear

உதாரணமாக உலக சந்தைகள் சிலவற்றில் இந்த கார் ஓர் முழு சார்ஜில் 470 கிமீ தரும் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமா, தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய வாகனமாகவும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் கார் மாடலே இந்தியாவில் அதன் தரிசனத்தை முதல் முறையாக வழங்கி இருக்கின்றது.

ஆகையால், இந்த காரின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரப்போவதில்லை என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவலே வெளியாகி இருக்கின்றது. அப்போ எதுக்குங்க இந்த காரை இந்தியா கொண்டு வந்திருக்காங்க என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம்.

Megane e-tech spied

Source: Autocar India இந்த காரை ரெனால்ட் நிறுவனம் அவர்களின் சொந்த பயன்பாட்டிற்காகவும், ஆய்வுப் பணிகளுக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், கடந்த நாட்களில் இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிளானில் ரெனால்ட் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு புதிய அப்டேட்டும் இல்லை.

எனவேதான் இந்த கார் மாடல் தற்போது விற்பனைக்காக கொண்டு வரப்படவில்லை என கூறப்படுகின்றது. அதேவேளையில், ஐரோப்பிய சந்தைகளில் இந்த கார் விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது. 40 kWh மற்றும் 60 kWh என இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலும், இரண்டு திறன் வெளிப்பாட்டு வசதிக் மின்சார மோட்டார் தேர்விலும் அந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஓர் எலெக்ட்ரிக் மோட்டார் 130 எச்பி மற்றும் 250 என்எம் டார்க்கையும், மற்றொன்று 218 எச்பி மற்றும் 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், இரண்டு அசத்தலான அம்சங்களாக காருக்குள் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் திரை மற்றும் 12 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் காரை ரெனால்ட் நிறுவனம் சிஎம்எஃப்-ஏ இவி எனும் மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பிளாட்பாரத்தை கொண்டே உருவாக்கி இருக்கின்றது. உலக சந்தையில் இந்த எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் மற்றும் மினி கூப்பர் நிறுவனத்தின் எஸ்இ மற்றும் கியா நிரோ இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிற்காக வேறு தனி பிளானைப் போட்டு இருக்கின்றது. அது சிஎம்எஃப்-ஏ இவி பிளாட்பாரத்தை தழுவி உருவாக்கப்பட்ட ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் கார்களையே விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. இத்துடன், புத்தம் புதிய டஸ்டர் காரையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே ரெனால்ட் நிறுவனம் போன்ற முன்னணி கார் பிராண்டுகள் இந்த பிரிவை அலங்கரிக்க பணியில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், இந்தியாவில் டாடா மோட்டார்ஸே இந்த பிரிவின் தலைவனாக மாறி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 29, 2024, 11:00 [IST]
English summary
Renault megane e tech spied in india first time here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X