சென்னை டூ பெங்களூரு நிக்காம போகும் எலெக்ட்ரிக் கார்! விலை இவ்வளவு கம்மி தானா?

ரெனால்ட் நிறுவனம் ஆர் 5 இடெக் என்ற முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் காரை ஐரோப்ப நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெனிவாவில் நடந்து வரும் மோட்டார் ஷோவில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை என்ன? இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன? என்ற விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் நிறுவனம் தற்போது புதிதாக ஆர் 5 இ-டெக் என்ற எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் தனது பழைய ஆர் 5 மற்றும் சூப்பர் 5 ஆகிய கார்களை அடிப்படையாக வைத்து தயாரித்துள்ளது. இந்த கார்கள் எல்லாம் 1970 மற்றும் 80களில் சிறப்பாக விற்பனையாகும் கார்களாக இருந்தது. 1972 முதல் 1996-ம் ஆண்டு வரை மொத்தம் 90 லட்சம் கார்கள் இந்த இரு மாடல் கார்களும் விற்பனையாகியுள்ளன.

renault r5 e tech

இந்த காரை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த ஆர்5 இ-டெக் என்ற கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிசைன் பழைய காரிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த கார் ஒரு ரெட்ரோ மாடல் கார் எல்லாம் கிடையாது. முற்றிலுமாக மாடலான லுக்கில் இந்த கார் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் எலெக்ட்ரிக் கார்களுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தி போகும் வகையில் இந்த காரை உருமாற்றி அதே நேரம் பழைய காரின் லுக்கும் கெடாமல் பார்த்து வடிவமைத்துள்ளனர்.

இந்த கார் 2024-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக இந்த கார் 52 கிலோ வாட் ஹவர் பேட்டரியுடன் சுமார் 400கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்ட காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெனால்ட் ஆர்5 இடெக் கார் பைடைரக்ஷனல் சார்ஜிங் அம்சத்துடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

renault r5 e tech

இந்த காரில் சுமார் 1500 கிலோ வரை எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக 326 லிட்டர் அளவு கொண்ட கார்கோ ஏரியா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் வீல்பேஸை பொறுத்தவரை 2540மிமீ வீல் பேஸ் மற்றும் ஃபிளாட் ஃப்ளோர் பெட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 கிலோ எடை கொண்ட பொருட்களை இழுத்து செல்லும் வகையில் இந்த கார் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த காரின் விலையை பொறுத்தவரை 25,000 யூரோ என்ற விலையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதன் இந்திய விலை மதிப்பில் ரூபாய் 22.50 லட்சம் என இந்த காருக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் இது குறைந்த விலை காராக எல்லாம் விற்பனைக்கு வராது. எலக்ட்ரிக் கார் மற்றும் அதிக ரேஞ்ச் கொண்ட கார் என்பதால் இந்த கார் அதிகமான விலையில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

renault r5 e tech

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகும் என்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் கார்களை அதிகம் தயாரிக்க முன்னெடுப்பு எடுத்து வருகின்றனர். இதன்படி வெளிநாடுகளில் எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பு என்பது அதிகமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது ரெனால்ட் நிறுவனம் தனது பழைய ஆர்5 காரை மீண்டும் புதுப்பித்து இ டெக் என்ற எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மற்ற பிராண்டுகளிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் நன்றாக விற்பனையாகி பின்னர் நிறுத்தப்பட்ட கார்கள் எல்லாம் மீண்டும் எலெக்ட்ரிக் அவதாரத்தில் புத்துயிர் பெற்று விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக செய்வதால் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார செலவு மிச்சமாகும்.

எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் எப்படி விற்பனையாகிறது என்பதை மார்க்கெட்டை கணித்து உணர சில காலம் தேவைப்படும். அதுவரை அதிகமான முதலீட்டை எலெக்ட்ரிக் காரில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடு செய்ய நினைக்காது. அதனால் பொருளாதார செலவை குறைப்பதற்காக இப்படியான பழைய கார்களை எல்லாம் எடுத்து எலெக்ட்ரிக் அவதாரத்தில் வெளியிடுவார்கள்.

டிரைவ்ஸ்பர்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் தற்போது சர்வதேச மார்க்கெட்டில் இந்த எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த காரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனைக்கு கொண்டு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது குறைந்த விலை எலக்ட்ரிக் காராக வரும் பட்சத்தில் நல்ல விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 12:29 [IST]
English summary
Renault r5 e tech electric model geneva motor show
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X