உலக அரங்கில் மானத்தை வாங்கிய மேட்-இன்-இந்தியா கார்... 5க்கு வெறும் 2 ஸ்டார் - பாதுகாப்பு ரொம்ப குறைவு!!

ரெனால்ட் (Renault), உலகளவில் நெட்வொர்க்கை கொண்டுள்ள முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் பிரபலமான கார்களுள் ஒன்று டிரைபர் (Triber) ஆகும். இந்தியாவில் விற்பனையில் இருந்த ரெனால்ட் டிரைபர் சமீபத்தில் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Global NCAP Crash Test)-இல் உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில், டிரைபரின் இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. க்ளோபல் என்சிஏபி-இல் ரெனால்ட் டஸ்டர் காருக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் மிகவும் சில கார்களுள் ஒன்று டிரைபர் ஆகும். ரெனால்ட்டின் எம்பிவி ரக காரான டிரைபர் ஆப்பிரிக்க நாடுகளிலும் விற்பனையில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிரைபர் கார்கள் தான் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

renault triber mpv achieves 2-star

இந்த அளவிற்கு வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படும் மேட்-இன்-இந்தியா ரெனால்ட் டிரைபர் சமீபத்தில் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டது. என்சிஏபி என்பது கார்களை மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றிற்கான தர மதிப்பெண்களை வழங்கும் அமைப்பு ஆகும். க்ளோபல் என்சிஏபி என்பது உலகளாவிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட் குழு ஆகும்.

இந்த கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட ரெனால்ட் டிரைபர் காருக்கு ஐந்திற்கு வெறும் 2 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டில் இதேபோன்று க்ளோபல் என்சிஏபி-இல் ரெனால்ட் டிரைபர் உட்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அப்போது இந்த ரெனால்ட் எம்பிவி காருக்கு ஐந்திற்கு 4 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதே மதிப்பெண்களை தற்போது மீண்டும் பெற டிரைபர் தவறியுள்ளது.

renault triber mpv achieves 2-star

தற்போதைய கிராஷ் டெஸ்ட்டில், டிரைபர் காரை ஓட்டும் டிரைவரின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கு சிறப்பான பாதுகாப்புக்கு கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முன்பக்கமாக மற்றும் பக்கவாட்டில் இருந்து காரை மோதவிட்டு பார்த்ததில் டிரைவரின் மார்பு பகுதிக்கு மிகவும் குறைவான பாதுகாப்புக்கே கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், காரில் போதுமான எண்ணிக்கையில் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர்கள் இல்லாததினால், குழந்தை டம்மியின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பு கிடைக்கவில்லை. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் காருக்கு முன்பக்கமாக இருந்தும், பக்கவாட்டில் இருந்தும் மோதல்களை ஏற்படுத்தி சோதனை செய்து பார்ப்பது வழக்கம். சமீப காலமாக, கூடுதலாக காரின் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோலும் சோதனை செய்து பார்க்கப்படுகிறது.

சோதனையில் அதிக ஸ்டார்களை பெறும் கார்களில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதும் ஆய்வு செய்யப்படும். மேலும், நிலையான ஒரு பொருள் மீது பக்கவாட்டில் கார் மோதினால் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் சோதித்து பார்க்கப்படும். இவற்றிலும் அதிக மதிப்பெண்களை பெறும் கார்களுக்கே க்ளோபல் என்சிஏபி-இல் அதிக ஸ்டார்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் எம்பிவி காரில் பயணிகளின் பாதுகாப்புக்கு இபிடி உடன் ஏபிஎஸ், இரு ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பாதுசாரிகளுக்கான பாதுகாப்பு, அதிவேக பயணத்தை எச்சரிக்கும் கருவி, சீட்-பெல்ட் ரிமைண்டர், வேகத்தை உணர்ந்து செயல்படும் டோர் லாக் மற்றும் விபத்தை உணர்ந்து தானாக அன்லாக் ஆகும் கதவுகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'ஆப்பிரிக்க நாடுகளுக்கான பாதுகாப்பான கார்கள்' என்கிற திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு விற்பனையில் உள்ள ரெனால்ட் டிரைபர் கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சோதனையில் அதிக மதிப்பெண்களை பெறாததால், டிரைபர் காரின் பெரியவர்கள் பாதுகாப்பு, சிறியவர்கள் பாதுகாப்பு மற்றும் சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ரெனால்ட் ஆளாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 31, 2024, 23:54 [IST]
English summary
Renault triber achieves just 2 star in global ncap crash test
மேலும்... #renault triber #renault #ncap
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+