வெறும் 35 பேர் தான் வாங்கியிருக்காங்க! 7 சீட்டர் கொண்டு குறைந்த விலை காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
2020 கொரோனா பரவலுக்கு பிறகு மக்கள் மத்தியில் குடும்பத்துடன் பயணிக்கும் விதமான அதிக சீட்டர் எண்ணிக்கை கொண்ட கார்கள் அதிகம் விரும்பபடுகிறது. இதனால் இந்த ரக கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி வந்த கார்கள், தற்போது அதிக எண்ணிக்கையில் விற்பனையாக துவங்கி உள்ளன0 ஆனால் இந்தியாவில் தயாராகும் ஒரு காரை வெளிநாட்டில் மிகக் குறைவான எண்ணிக்கையில் வாங்கி வருகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
இந்தியாவில் சமீபகாலமாக 7 சீட்டர் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி மாருதி நிறுவனத்தின் எர்டிகா, மஹிந்திரா ஸ்கார்பியோ, டொயோட்டா இன்னோவா, ரெனால்ட் டிரைபர் ஆகிய கார்கள் இந்த செக்மெண்டில் பிரபலமான கார்களாக இருக்கின்றன. இதில் ரெனால்ட் டிரைவர் காரை பொறுத்தவரை கடந்த மே மாதம் மொத்தம் 2,116 கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன.

விலையை ஒப்பிடும்போது 7 சீட்டர் கார்களிலேயே ரெனால்ட் டிரைபர் கார் தான் குறைந்த விலையில் விற்பனையாகி வருவதால் இந்த கார் மீது மக்கள் அதிக மோகம் கொண்டு உள்ளார்கள். இதன் காரணமாக இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது. இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த காரின் ஏற்றுமதி என்பது மிக மோசமான நிலையில் இருந்துள்ளது.
கடந்த மே மாதம் வெறும் 35 ரெனால்ட் டிரைபர் கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன. 2013ம் ஆண்டு இந்த காலகட்டத்தில் இதன் ஏற்றுமதியை ஒப்படும் போது தற்போது 91.57% அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் மொத்தம் 415 கார்கள் ஏற்றுமதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சரி இந்த காரில் உள்ள அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை பார்ப்போம்.

இந்த காரின் உட்புறம் 8இன்ச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக 7இன்ச் கொண்ட டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே இருக்கிறது. வயர்லெஸ் போன் சார்ஜர், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோ, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப், உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. சென்டர் கன்சோல்ல் பகுதியில் கூல்டு ஸ்டோரேஜ் அம்சமும் இருக்கிறது.
இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை நான்கு ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக பின்பக்க பார்க்கிங் சென்சார் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. மார்க்கெட்டில் உள்ள மற்ற போட்டி நிறுவனங்களின் காரை விட இந்த காரில் ஓரளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் நன்றாக இருக்கிறது என்றே சொல்லலாம். இதனால் இந்த காருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரெனால்ட் டிரைபர் காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 18 முதல் 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் ரூ6 லட்சம் முதல் ரூ8.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலை மிக குறைவாக இருப்பதால் மிடில் கிளாஸ் மக்கள் இந்த காரை வாங்குகிறார்கள். குடும்பத்துடன் பயணிக்க இந்த கார் ஏற்றதாக இருக்கிறது. பின்பக்க சீட்டுகள் குழந்தைகளுக்காகவும் முன்பக்க இரண்டு வரிசை சீட்டுகள் பெரியோர்களுக்காகவும் ஒதுக்க இந்த கார் ஏற்ற காராக இருக்கிறது. அல்லது அதிக பொருட்களை ஏற்றிச்செல்ல இந்த கார் உதவுகிறது.
ரெனால்ட் டிரைபர் கார் நீண்ட நாட்களாக பெரிய அப்டேட் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த காரை பலர் வாங்க தயங்கி வருகிறார்கள். நவீன தொழில்நுட்ப அப்டேட்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில், பலர் இந்த காரை வாங்க வாய்ப்புள்ளது. ரெனால்ட் நிறுவனம் இது குறித்து யோசித்து இந்த காரை அப்டேட் செய்து வெளியிட வேண்டும். அப்டேட் செய்யும் பட்சத்தில் இன்னும் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் மக்கள் விரும்பும் காராக இருக்கிறது. இந்த காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருந்தாலும், வெளிநாடுகளில் இந்த காருக்கான வரவேற்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்த கார் வெகு சிலரை வாங்கி உள்ளார்கள். இதை அப்டேட் செய்தால் நிச்சயம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்தியாவிலும் போட்டி கார்களுக்கு இணையான விற்பனையை பெறும்.


Click it and Unblock the Notifications









