7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 7 பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 2,247 ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 7 சீட்டர் கார்களின் பட்டியலில், ரெனால்ட் ட்ரைபர் 9வது இடத்தை பிடித்துள்ளது. எனினும் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 2,538 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2,247 என்ற விற்பனை எண்ணிக்கையை மட்டும்தான் இந்த எம்பிவி கார் பதிவு செய்துள்ளது. இது 11 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Renault Triber

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த குறைவான விலை காரணமாகவே ரெனால்ட் ட்ரைபர் காரை, வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர். செயல்திறனை பொறுத்தவரையில் ரெனால்ட் ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

Maruti Suzuki Ertiga

ரெனால்ட் ட்ரைபர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 18.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 7 சீட்டர் கார் என்பதை கணக்கில் கொள்ளும்போது, இது சிறப்பான மைலேஜ் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. ரெனால்ட் ட்ரைபர் காரை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி கொண்டிருப்பதற்கு இவையும் மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் நிறுவனம் புதிய வசதிகள் மற்றும் கலர் ஆப்ஷன்களுடன் கூடிய ட்ரைபர் காரின் அப்டேட் செய்யப்பட்ட 2024 மாடலை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இருப்பினும் ட்ரைபர் காரின் விற்பனை குறைந்திருப்பது, ரெனால்ட் நிறுவனத்திற்கு கவலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

இருப்பினும் வரும் மாதங்களில் ரெனால்ட் ட்ரைபர் கார், விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவில் இருந்து மீண்டு வருமா? என்பதை பார்க்க, நாம் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்யக்கூடிய மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு எம்பிவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுடன், ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது. இது விலை குறைவான காராக இருந்தாலும் கூட, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 23:58 [IST]
English summary
Renault triber mpv sales report march 2024
மேலும்... #ரெனால்ட் #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+