2 குடும்பம் ஒரே கார்ல போகலாம்... விலை என்ன இவ்ளோ கம்மியா இருக்கு... விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருக்கணும்...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரில் மொத்தம் 7 இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக ரெனால்ட் ட்ரைபர் திகழ்கிறது. இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 2,116 ட்ரைபர் கார்களை விற்பனை செய்திருக்கிறது.
இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 2,115 ஆக இருந்தது. அதாவது கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2024ம் ஆண்டு மே மாதம், ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே ஒரு ட்ரைபர் காரை அதிகமாக விற்பனை செய்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஓரளவிற்கு குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை வாங்க வேண்டும் என எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த ஆப்ஷனாக உள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக 72 பிஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது விலை குறைவான காராக இருந்தாலும் கூட, வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகியவை, ரெனால்ட் ட்ரைபர் காரின் மிக முக்கியமான வசதிகளாக இருக்கின்றன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் எல்லாம் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ரெனால்ட் ட்ரைபர் திகழ்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா காருடன் ஒப்பிடும்போது, ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை மிகவும் குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








