ஒரு 7 சீட்டர் காரை இதுக்கு மேல கம்மி விலையில் யாராலயும் விக்க முடியாது! பைக் வாங்கற காசுல இதை வாங்கிடலாம்!

இந்திய சந்தையில் எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். எம்பிவி செக்மெண்ட்டை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகிய கார்கள் எல்லாம், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இதில், ரெனால்ட் ட்ரைபர் காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 1,514 ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,821 ஆக இருந்தது. இது 17 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Renault Triber

செயல்திறனை பொறுத்தவரையில், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) மட்டுமே வழங்கப்படுகிறது. அது 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன்தான் என்றாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் காரில், 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகியவை ஆகும். இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான எம்பிவி ரக கார்களில் ஒன்று.

Renault Triber Interior

இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் (Features), ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில் வழங்கப்பட்டுள்ளன. இதில், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ரெனால்ட் ட்ரைபர் காரில், பாதுகாப்பு (Safety) வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 4 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமரா போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பு வசதிகள் ஆகும்.

இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் என்பதால், 7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அவசியம் ஏற்பட்டால், இந்த காரின் 3வது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ளலாம். அப்படி செய்யும்போது, ரெனால்ட் ட்ரைபர் காரின் பூட் ஸ்பேஸ் (Boot Space) 680 லிட்டர்களாக இருக்கும். எனவே லக்கேஜ்களையும் சுலபமாக கொண்டு செல்ல முடியும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது இந்தியாவில் கிடைக்க கூடிய ஒரு சில பிரீமியம் பைக்குகளை விட குறைவான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு, மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக, ரெனால்ட் ட்ரைபர் கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலையே 8.69 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். மாருதி சுஸுகி எர்டிகா உடன் ஒப்பிடும்போது, ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை பல லட்ச ரூபாய் குறைவு. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் நிறுவனம் தற்போது ட்ரைபர் காரின் நைட் & டே லிமிடெட் எடிசன் (Night & Day Limited Edition) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை எண்ணிக்கையை சற்றே உயர்த்துவதற்கு உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2024, 16:15 [IST]
English summary
Renault triber sales report august 2024 17 per cent degrowth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+