ஒரு திருவிழா கூட்டத்தையே இந்த கார்ல ஏத்தீட்டு போலாம்! ஆனா விலை இவ்ளோதானா! கண்ண மூடிட்டு வாங்கீர வேண்டியதுதான்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த ரெனால்ட் ட்ரைபர் காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில், 1,457 ட்ரைபர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், 1,802 ஆக இருந்தது.

இது 19 சதவீத வீழ்ச்சி ஆகும். நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டுமல்லாது, சமீப காலமாகவே ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுதான் உள்ளது. இத்தனைக்கும் இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய எம்பிவி ரக கார் ஆகும்.

Renault Triber

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இது ஒரு 7 சீட்டர் கார் ஆகும். எனவே ஓரளவிற்கு குறைவான விலையில், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு எம்பிவி ரக காரை தேடி கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் ஏற்றதாக இருக்கும். செயல்திறனை பொறுத்தவரையில், ரெனால்ட் ட்ரைபர் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

Renault Triber Interior

அது 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

விலை குறைவான கார் என்றாலும் கூட ரெனால்ட் ட்ரைபரில் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருந்தாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. எனவே விற்பனையை அதிகரிப்பதற்காக ட்ரைபர் காருக்கு ரெனால்ட் நிறுவனம் தற்போது ஏராளமான சலுகைகளை வழங்கி கொண்டுள்ளது.

இதன் மூலமாக ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை அதிகரிக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கு எல்லாம், ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 23:53 [IST]
English summary
Renault triber sales report july 2024
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+