இவ்ளோ கம்மி விலையில் 7 சீட்டர் காரா! அடிமாட்டு விலையில் விக்கறாங்க! லோன் போடாம கைல இருக்கற காசுலயே வாங்கீரலாம்

இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கான (7 Seater Cars) தேவை அதிகளவில் உள்ளது. அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் தேவைகளை 7 சீட்டர் கார்கள்தான் பூர்த்தி செய்து கொண்டுள்ளன. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் 7 சீட்டர் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ரெனால்ட் நிறுவனமும் ஒன்றாகும். ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) என்ற 7 சீட்டர் காரை அந்நிறுவனம் விற்பனை செய்கிறது. எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த ரெனால்ட் ட்ரைபர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,538 ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,642 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 6 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Renault Triber

இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், ரெனால்ட் ட்ரைபர் கார் உடனடியாகவே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால், நடப்பு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகும்போது, ரெனால்ட் ட்ரைபர் கார் வளர்ச்சி பாதைக்கு திரும்பியிருக்கலாம்.

இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான எம்பிவி ரக கார்களில் ஒன்றாக ரெனால்ட் ட்ரைபரை குறிப்பிடலாம். மிகவும் விலை குறைவானது என்றாலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் காரில் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவை ஆகும்.

Renault Triber Side Design

இதுதவிர வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், இபிடி உடன் ஏபிஎஸ், ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும், ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் குளோபல் என்சிஏபி பாதுகாப்பு ரேட்டிங் (Global NCAP Safety Rating) 4 ஸ்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் ரெனால்ட் ட்ரைபர் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை மிகவும் குறைவுதான்.

இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ரெனால்ட் ட்ரைபர் உள்ளது. இந்த கார்களுடன் ஒப்பிடும்போது, ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை பல லட்ச ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 21:23 [IST]
English summary
Renault triber sales report september 2024 6 per cent down
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+