இந்த காருக்கு எப்படியும் வயசு 15க்கும் மேல இருக்கும்.. கிழவியையே குமரியா மாத்தினதை போல இருக்கு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் வேகன்ஆர் (WagonR)-ம் ஒன்றாகும். இந்த ஹேட்ச்பேக் காரை இந்தியர்கள் செல்லமாக டால் பாய் (உயரமான பையன்) என்று அழைக்கின்றனர். இந்தியாவின் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடலாக வேகன்ஆர் உள்ளது. இந்த காரை 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி அன்றே மாருதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் முதல் வெர்ஷன் 1999 ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு வரை விற்பனைச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு பின்னரே அதாவது, 2007 ஆம் ஆண்டிலேயே புதிய வெர்ஷன் வேகன்ஆர் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. மேலும், ஆண்டுகள் பல ஆகிவிட்டால் முதன் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் வெர்ஷன் பயன்பாட்டிலேயே இல்லாத சூழல் உருவாகி இருக்கின்றது. இருப்பினும் ஒரு சில உள்ளன.

அந்த மாதிரியான ஓர் முதல் வெர்ஷன் வேகன்ஆர் கார் மாடலே இப்போதும் பார்க்க புத்தம் புதியதுபோல் இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போதுதான் ஷோரூமில் இருந்து இறக்கியதைப் போல் அந்த கார் உள்ளது. கார் புதுப்பிக்கும் பணியின் வாயிலாகவே இவ்வாறு வேகன்ஆர் மாற்றப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுகுறித்த வீடியோவையே தற்போது பிரபல யுட்யூப் சேனலான சேனலான ஆட்டோரவுண்டர்ஸே வெளியிட்டு இருக்கின்றது. புத்தம் புதிய கார் மாடலாக மாற்றப்பட்டு இருக்கும் அந்த காரின் உரிமையாளர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை நல்ல வரவேற்பு வேகன்ஆர் காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அவ்வப்போது புதுப்பித்தல்களை வழங்கியும், சிறப்பம்சங்களை சேர்த்தும் இந்த காரை மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இன்றளவும் இந்த கார் மாடல் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக உள்ளது. இத்தகைய கார் மாடலுக்கே பெருமிதம் சேர்க்கும் வகையில் இந்த புதுப்பித்தல் பணி அமைந்துள்ளது.
இந்த கார் மாடலின் சரியான ஆண்டு குறிப்பிடப்படவில்லை. என்றாலும், அதன் நிலை வைத்து பார்க்கையில் அதன் வயது எப்படியும் 15க்கு மேல் இருக்கும் என யூகிக்க முடிகின்றது. காரின் உடலில் ஏராளமான கீறல்கள், சொட்டைகள் உள்ளன. இத்துடன் பெயிண்ட் மங்கியும், உரிந்தும் இருந்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே அக்காரை அதன் உரிமையாளர் புதுப்பிக்கும் பணியை கையில் எடுத்திருக்கின்றார். குறிப்பாக, மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும் காரின் உள் மற்றும் வெளிப்பக்கம் எப்படி இருந்தது என்பதை வீடியோவில் யுட்யூப் சேனல் காட்டியிருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் எத்தகைய மிகப் பெரிய வேலையை அவர்கள் இந்த காரை புதியது போல் காண்பிக்கச் செய்திருக்கின்றனர் என்பதை நம்மால் அறிய முடிகின்றது.
இந்த கார் சாலையில் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக புதிய நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது. டூயல் டோன் பெயிண்ட் வேலை செய்யப்பட்டுள்ளது. பிரதான நிறமாக உடல் முழுக்க நீல வண்ணமே பூசப்பட்டு உள்ளது. கூரை பளபளப்பான கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்த வண்ண கலவையானது காரின் அழகியல் கவர்ச்சியை மேம்படுத்தும் அமைந்துள்ளது.
அத்துடன், ரேஸ் வாகனங்களைப் போல அதன் முன் பக்கம் தொடங்கி பின் பக்கம் வரை இரண்டு வெள்ளை கோடுகள் வரையப்பட்டு இருக்கின்றன. இது காருக்கு கூடுதல் கவர்ச்சியான அழகை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுதவிர, காரின் ஹெட்லைட், கிரில் உள்ளிட்டவை மாற்றப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர காரின் உட்பக்கமும் புதிய கருவிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக கியர் லிவர் மாற்றப்பட்டு இருக்கின்றது. இதுதவிர கூடுதல் பிரீமியம் உணர்வை வழங்க வேண்டும் என்பதற்காக டேஷ்போர்டு முழுவதும் புதிய டிசைனைக் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. இதே ஸ்டிக்கர்களை கார் கதவின் உட்பக்கங்களில் நம்மால் காண முடிகின்றது. இத்துடன், ஸ்டியரிங் வீலும் மாற்றப்பட்டு இருக்கின்றது. மேலும், இருக்கை உள்ளிட்டவையும் புதியதாக மாற்றப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களை இதுபோன்று மாடிஃபை செய்யும் செயலுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. உருவத்தை மாற்றும் வகையில் செய்யக் கூடிய அனைத்து மாற்றங்களும் ஆர்டிஓ-வால் உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அது பெறாத வாகனங்களை போக்குவரத்தை காவலர்கள் சிறைப்பிடிப்பதோடு, உரிய அபராதத்தையும் வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








