கார், பைக்தான் நல்ல சேல்ஸ் ஆகுதுன்னு பார்த்தா சரக்கு வண்டியை கூட இவ்வளவு பேர் வாங்கிருக்காங்களா?

இந்தியாவில் கடந்த மாதம் கமர்சியல் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்குவதாலும் மத்திய அரசு இந்தியாவின் உட்பட்ட அமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி உள்ளதாலும், நிலக்கரி, சிமெண்ட், இரும்பு போன்ற பொருட்களின் தேவை அதிகமானதாலும் கமர்சியல் வாகனங்களின் விற்பனை அதிகமாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 73,896 கமர்சியல் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அந்த மாதம் வெறும் 72,944 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. தற்போது 1.3 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இதுவே கடந்த நவம்பர் மாத விற்பனையான 84, 856 என்ற எண்ணிக்கை விட ஒப்பிடும்போது விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

CV Sales Dec 2023

கமர்சியல் செக்மென்டில் டாடா நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தமாக 26,205 வாகனங்களை கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. இது ஒட்டுமொத்த கமர்சியல் வாகன விற்பனையில் 35.46 சதவீத மார்க்கெட் பங்கு ஆகும். இந்நிறுவனம் கடந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27,743 வாகனங்களை விற்பனை செய்திருந்தது தற்போது விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 19,662 வாகனங்களை கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு ரிசபரு மாதம் 18,084 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனையில் இந்நிறுவனம் வளர்ச்சியை சந்தித்துள்ளது.

CV Sales Dec 2023

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2023 டிசம்பர் மாதம் 11427 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை ஒப்பிடும்போது 11287 வாகனங்கள் மட்டுமே அப்பொழுது விற்பனையாகிய இருந்தன. கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை தான் இந்நிறுவனம் செய்துள்ளது.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் விஇ கமர்சியல் வெகிகிள் லிமிடெட் நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் 4,751 வாகனங்களை கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனை செய்திருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 3165 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

CV Sales Dec 2023

இந்த பட்டியலில் 6வது இடத்தில் டைம்லர் இந்தியா கமர்சியல் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1534 வாகனங்களை கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்திருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தமாக 877 வாகனங்களை கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்திருந்தது.

இறுதியாக எஸ்எம்எல் இசூஸூ லிமிடெட் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தமாக 622 வாகனங்களை கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்திருந்தது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து மொத்தமாக 5,553 வாகனங்களை விற்பனை செய்திருந்தது மொத்தமாக கடந்த டிசம்பர் மாதம் 73,896 வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தன.

கடந்த 2023-ம் ஆண்டு மொத்த ஆண்டில் மொத்தம் 9,94,330 கமர்சியல் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகி இருந்தது. இதுவே கடந்த 2022-ம் ஆண்டு வெறும் 9,18,296 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இது 8.28% வளர்ச்சியாகும். கமர்சியல் வாகனங்களை பொறுத்தவரை இலகு ரக கமர்சியல் வாகனங்கள், கன ரக கமர்சியல் வாகனங்கள் என இரண்டு வகைகளாக விற்பனையாகி வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கமர்ஷியல் வாகனங்களில் விற்பனை என்பது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. கமர்சியல் வாகனங்கள் பெரும்பாலும் சரக்கு போக்குவதற்காக தான் பயன்படுத்தப்படும். சரக்கு போக்குவரத்து அதிகமாக இருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு அறிகுறியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 15, 2024, 17:04 [IST]
English summary
Retail sales dec 2023 tata mahindra ashok leyland vecv force motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X