இந்த கார இருட்டான ரூட்ல எடுத்துட்டு போனா கார் இருப்பதே தெரியாது.. அவ்ளோ கருப்பான காரை வாங்கிய மலிங்கா!..

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு வீரரான மலிங்கா, உலகின் விலை உயர்ந்த சொகுசு கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை மலிங்காவும் உறுதி செய்திருக்கின்றார். இன்ஸ்டா பதிவின் வாயிலாகவே அவர் உறுதி செய்திருக்கின்றார். புதிதாக டெலிவரி எடுக்கப்பட்ட காருடன் அவரும், அவருடைய மனைவியும் நிற்பது மாதிரியான வீடியோவையே அவர் பகிர்ந்திருக்கின்றார். இத்துடன், "வீட்டிற்கு வரவேற்கிறோம்", பிளாக் பியூடிட் (#blackbeauty) மற்றும் ஜெனசிஸ் (#genesis) என்கிற ஹேஸ்டேக் (Hashtag)-கையும் அவர் பகிர்ந்திருக்கின்றார்.

இந்த பதிவின் வாயிலாகவே இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு வீரர் புதிய ஜெனசிஸ் (Genesis) சொகுசு கார் மாடலை வாங்கி இருப்பது ஸ்ட்ராங்காக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால் தான் என்ன கார் மாடலை வாங்கியிருக்கின்றேன் என்பதை அவர் துள்ளியமாக அறிவிக்கவில்லை.

Retired sri lankan cricketer lasith malinga buys genesis gv80

இருப்பினும், அவரின் பதிவு மற்றும் வீடியோவின் வாயிலாக அந்த கார் மாடல் ஜெனசிஸ் ஜிவி80 பிளாக் (Genesis GV80) என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. அதேவேளையில், உலக சந்தையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இது ஓர் லக்சூரி எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஜிவி80 பிளாக் (Genesis GV80 Black) மற்றும் ஜிவி80 கூபே பிளாக் (Genesis GV80 Coupe Black) என்கிற இரண்டு விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிகவும் கவர்ச்சியான கருப்பு நிறத்திலேயே அது அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மிகவும் இருட்டான சாலையில் இந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தால் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானதாக மாறிவிடும். அந்த அளவிற்கு கருப்பான நிறத்தில் அந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. காரின் பெரும்பாலான பாகங்கள் கருப்பு நிறத்திலயே காட்சியளிக்கின்றது. வெளிப்பக்கம் மட்டுமல்ல உட்பக்கமும் கருப்பு நிறத்திலேயே அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

சொல்லப் போனால் லைட்டுகள் இருக்கும இடம் மற்றும் வேறு சில அணிகலன்கள் மட்டுமே மாற்று நிறத்தில் உள்ளன. மற்ற அனைத்தும் கருப்பு நிறத்திலேயே காட்சியளிக்கின்றன. இத்தகைய ஓர் கார் மாடலையே மலிங்கா தற்போது தன்னுடைய வீட்டிற்கு புதிதாக ஓட்டிச் சென்று இருக்கின்றார்.

இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றாக அதன் வீல்கள் இருக்கின்றன. 22 அங்குல அலாய் வீல்களே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுவும் கருப்பு நிறத்திலேயே அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

க்ளாஸ்ஸி கருப்பு நிறமே அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வீல்களின் மையப் பகுதியில் இருக்கும் மூடிகள் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைப் போல இருக்கின்றன. எனவே சின்ன சின்ன அணிகலன்களையும் இந்த காரில் அதிக முக்கியத்தும் வழங்கி பொருத்தப்பட்டு இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

இதேபோல், பிரீமியம் மற்றும் சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கக் கடிய அம்சங்களும் இந்த காரில் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பிரீமியம் கார் தரை விரிப்பான்கள், அதிக சொகுசான அனுபவத்தை வழங்கக் கூடிய ஹெட்லைனர்கள் உள்ளிட்டவற்றை இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கும்.

இவையும் கருப்பு நிறத்திலேயே இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, பயணிகளின் சுவாரஷ்யமான பயண அனுபவத்திற்காக இந்த காரில் 27 அங்குல அளவில் பெரிய ஓஎல்இடி திரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கும். இதுபோன்ற அம்சங்களினாலேயே ஜெனசிஸ் ஜிவி80 பிளாக் கார் மாடல் அதிக சொகுசான மற்றும் அதிக பிரீமியம் அம்சம் கொண்ட காராக காட்சியளிக்கின்றது.

இந்த காரில் 3.5 லிட்டர் பெட்ரோல் டர்போ எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 380 குதிரை திறனை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும். இதனால் வெறும் 6.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலிங்கா வாங்கியிருக்கும் இந்த பிராண்டை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னும் அதன் அதிகாரப்பூர்வ வருகை பற்றிய துள்ளியமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்தியாவில் இப்போது சொகுசு கார்களுக்கு டிமாண்ட் அதிகம் என்பதால் இந்த பிராண்டை விரைவிலேயே ஹூண்டாய் நாட்டில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2024, 11:00 [IST]
English summary
Retired sri lankan cricketer lasith malinga buys genesis gv80 black luxury suv more details
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+