மதிப்பு 209 கோடி ரூபாயாம்!.. ஆனா ரெண்டு பேருக்கு மேல பயணிக்க முடியாதாம்.. அழகால வாயை கட்டிப்போட்டுட்டாங்க!
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனம், ஆர்கேடியா டிராப்டெயில் (Arcadia Drop-Tail) சொகுசு கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் ரோட்ஸ்டர் (Roadster) வகை சொகுசு கார் மாடல் ஆகும். இந்த காரை தோராயமாக சுமார் 209 கோடி ரூபாய் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
மேலும், இந்த காரை சிங்கப்பூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை உலக நாடுகள் சிலவற்றில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டே ரோல்ஸ் ராய்ஸ் வடிவமைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளே அதன் ரோல் மாடல் லிஸ்டில் உள்ளன.

காரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளை நிறத்தைக் கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் அலங்கரித்து இருக்கின்றது. இந்த நிறம் அலுமினியம் மற்றும் கண்ணாடி துகள்களின் கலவையால் உருவாக்கப்பட்டது என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், காரின் உட்பக்கம் மற்றும் அடிப்பக்கம் உள்ளிட்வை மாற்று நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.
உதாராணமாக, டிராப்டெயிலில் உள்ள மற்ற மாடல்களைப் போல் இல்லாமல் ஆர்கேடியா டிராப்டெயிலின் அடிப்பக்கம் கார்பன் ஃபைபர் டப்-ஆல் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் நிறத்தைப் பொருத்த வரை அதே சில்வர் வண்ண பூச்சே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரின் உட்பக்கம் மரத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இதற்காக சாண்டாஸ் ஸ்ட்ரைட் கிரைன் ரோஸ்வுட் (Santos Straight Grain RoseWood)-டே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது காரின் உட்பக்கத்திற்கு மிகவும் ரிச்சான தோற்றத்தை வழங்கும் நோக்கிலேயே வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த மரம் ரோல்ஸ் ராய்ஸின் வேறு எந்த கார் மாடல்களில் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
எனவே, இதனை காருக்கு ஏற்ப வடிவமைப்பதில் மிகப் பெரிய சவாலை பொறியியல் வல்லுநர்கள் சந்தித்து இருக்கின்றனர். மேலும், ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா டிராப்டெயில் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இந்த மர பேனல்கள் கடுமையான வெயில் காலத்தால் பாதிப்படையக் கூடும். உதிர்ந்துபோகுதல் அல்லது விரிசல்களை அது சந்திக்க நேரிடலாம்.
எனவே இதனைத் தடுக்க சூப்பர் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்டிங்கை பயன்படுத்த ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டு இருக்கின்றது. ஆனால், விரைவிலேயே இந்த திட்டத்தை கைவிட்டு வழக்கமான கோட்டிங்கையே மர பேனல்களில் அது பயன்படுத்தி இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 233 துண்டு மர பேனல்கள் இதில் பயன்டுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனை ரெடி செய்ய மட்டுமே சுமார் 8000 மணி நேரங்கள் எடுத்துக் கொண்டதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து இருக்கின்றது. இந்த காரின் டேஷ்போர்டில் உள்ள மிக முக்கியமான அம்சங்களில் கடிகாரமும் ஒன்றாகும். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஓர் கடிகாரமே இதுவாகும்.
இந்த காரை உருவாக்கியதிலேயே அதிக சிக்கலானதாக டேஷ்போர்டே இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதற்காக இரண்டு வருட ஆராய்ச்சிகள் மற்றும் ஐந்து மாத அசெம்பிளி பணி நடைபெற்றிருக்கின்றது. இதுபோன்று பார்த்து பார்த்து பணக்காரர்களுக்காக தயர் செய்யப்பட்டு இருக்கும் இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரில் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 6.75 லிட்டர் வி12 மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 601 எச்பி மற்றும் 841 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் ரோல்ஸ் ராய்ஸின் வேறு சில முன்னணி மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக பணக்காரர்களை வசியம் செய்யும் வகையிலேயே இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதனை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும், எவ்வளவு ரூபாய் விலையில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது போன்ற எந்த விபரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த கார் பெரும் செல்வந்தர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications








