அம்பானியே இந்த காரை வாங்க யோசிப்பாரு! இதோட விலை ஷங்கர் பட பட்ஜெட்டை விட ஜாஸ்தியா இருக்குதே!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது ஆர்காடியா டிராப்டெயில் என்ற புதிய காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூபாய் 256 கோடி என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு விலை மதிப்பு கொண்ட இந்த காரில் அப்படி என்னதான் இருக்கிறது? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நாம் அதிக விலை கொண்ட சொகுசு கார் ஒன்று வாங்க வேண்டும் என நினைத்தால் நம் நினைவுக்கு வரும் முதல் பிராண்டின் பெயர் ரோல்ஸ் ராய்ஸ் தான். உலகிலேயே அதிகமான விலை கொண்ட சொகுசு கார்களை விற்பனை செய்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த கார் நிறுவனம் இது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமாக இருக்கிறது.

rolls royce arcadia droptail

இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது புதிய கார் ஒன்றை பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது. ரோஸ்டர் பாடி ஸ்டைல் கொண்ட இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு ஆர்காடியா டிராப்டெயில் என பெயர் வைத்துள்ளனர். இதில் ஆர்காடியா என்ற பெயர் கிரீக் இதிகாசத்தின்படி பூமியில் உள்ள சொர்க்கம் என்று அர்த்தம். டிராப்டெயில் என்பது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வரிசையாக வெளியிடும் கார்கள்.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் இந்த ஆர்காடியா டிராப்டெயில் கார் ரூஃப் இல்லாத காராகும். இது இரண்டு டோர் கொண்ட டிசைன் கொண்ட காராக இருக்கிறது. இதன் பெயிண்ட் மிகவும் வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது. அலுமினியம் மற்றும் கிளாஸ் ஆகியவற்றை கொண்டு இந்த கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது காரின் மீது வெளியில் உள்ள ஒளி பட்டால் பிரகாசிக்கும் அளவிற்கு இந்த பெயிண்ட் சிறப்பான அம்சம் கொண்டதாக இருக்கிறது.

rolls royce arcadia droptail

இது மட்டுமல்லாமல் இந்த கார் அருகே சென்று பார்க்கும் போது இந்த காரின் பெயிண்ட் நல்ல ஆழமாக இருப்பது உங்களுக்கு தெரிய வரும். மற்ற டிராப்டெயில் கார்களை விட இந்த ஆர்காடியா டிராப்டெயில் சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த காரின் அடிப்பாகத்தில் பிஸ்போக் சில்வர் கலர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாதி வெளியே தெரியும்படி வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 22 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது முழுவதுமாக மிர்ரர் பாலிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை சாண்டோஸ் ஸ்ட்ரீட் கிரைன் கொண்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது இன்டெர் லாக்கிங் பேட்டனுடன் இந்த காருக்கு உள்ளே ஒரு நல்ல டெக்ஷரை வழங்கும் வகையில் இருக்கிறது. இந்த காரின் உள்ளே அதிக அடர்த்தி கொண்ட ஹார்டுவுட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

rolls royce arcadia droptail

காரில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மிஷின் உள்ளே இது சொல்லும் போது ஈசியாக கிராக் ஆகிவிடும். இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 6.75 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 593 பிஎச்பி பவரையும் 841 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் ஐந்து நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள சிறப்பு அம்சமே இந்த காரின் விலை தான் இந்த கார் மார்க்கெட்டிற்கு வரும்போது 31 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் அதன் இந்திய மதிப்பு ரூபாய் 256 கோடியாகும்.

இந்த காரின் விலை மிக அதிகமாக இருப்பதால் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார்கள் விற்பனையாகும். இந்த கார்களை பார்ப்பது என்பதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும். மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த காரை வாங்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இந்த காரை யாராவது வாங்குவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வரிசையாக பிரிமியம் ரக கார்களை மட்டுமே குறிவைத்து தயார் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் கார்களில் பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக செய்வதால் அந்த காரின் விலை என்பது மிக அதிகமாகிறது. பெரும்பாலான காரின் வேலைப்பாடுகளை கை மூலமே செய்வதால் ஒரு கார் தயாராகவே பல மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2024, 7:00 [IST]
English summary
Rolls royce arcadia droptail luxury car worth 256 cr
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X