மொத்த சொத்தையும் விற்றால்கூட பத்தாது... அம்பானி வாங்குவதற்கு இப்போதே ரெடியாகிட்டு இருப்பாரு!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), உலகின் மக்கள் பலர் மிகவும் விரும்பக்கூடிய லக்சரி கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தின் கல்லீனன் (Cullinan) கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கல்லீனன் காரில் புதியதாக இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கல்லீனன் சீரிஸ்-2 மற்றும் பிளாக் பேட்ஜ் கல்லீனன் சீரிஸ்-2 என்பன அந்த இரு வேரியண்ட்கள் ஆகும். இந்த புதிய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்றாலே மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் ஸ்பெஷலானது தான். அதிலிலும், ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் எஸ்யூவி கார்கள் மல்டி மில்லியனர்கள் மத்தியில் மிக பிரபலமானவைகளாக விளங்குகின்றன. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி 10 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்களை வைத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

rolls-royce cullinan series-2 launched

அத்தகைய கல்லீனன் காரில் தற்போது கல்லீனன் சீரிஸ்-2 மற்றும் பிளாக் பேட்ஜ் கல்லீனன் சீரிஸ்-2 என இரு வெர்சன்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களை இந்தியாவில் உள்ள இரு ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் ஷோரூம்களில் மட்டுமே வாங்க முடியும். ஒன்று சென்னையிலும், மற்றொன்று டெல்லியிலும் உள்ளது. இந்த ஷோரூம்களில் புதிய கல்லீனன் கார்களை இனி நேரில் பார்க்க முடியும்.

புதிய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் சீரிஸ்-2 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.50 கோடியாகவும், பிளாக் பேட்ஜ் கல்லீனன் சீரிஸ்-2 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.25 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகளே ஆகும். இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம் உள்ளிட்டவற்றை சேர்த்தால், ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடிகள் அதிகமாக வரும்.

அதுமட்டுமின்றி, எந்தவொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரையும் வாடிக்கையாளர் அப்படியே வாங்கிக் கொள்ள மாட்டார். தனது விருப்பத்திற்கேற்ப சில பல மாற்றங்களை செய்துக் கொண்ட பின்பே வாங்குவார். அதற்கும் சில கோடி ரூபாய்கள் வரையில் செலவாகும். முதல் வாடிக்கையாளருக்கு இந்த புதிய கல்லீனன் கார்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் இன்னும் சில மாதங்களில் துவங்கப்படலாம்.

ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் சீரிஸ்-2 காரில் 6.75 லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. புதிய கல்லீனன் சீரிஸ்-2 கார்கள் அறிமுகம் குறித்து ஆசிய-பசுபிக் நாடுகளுக்கான ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஐரீன் நிக்கின் கூறுகையில், "இந்தியாவில் கல்லீனன் சீரிஸ்-2இன் அறிமுகமானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிக்கிறது.

2018ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்த குறிப்பிடத்தக்க கார் (கல்லீனன்) இளைய மற்றும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது" என்றார். கல்லீனன் கார் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட புதியதில் 70% கார் தானாக செயல்படக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது வெறும் 10% மட்டுமே தானாக இயங்கக்கூடியதாகவும், மீதி 90% டிரைவரால் இயங்கக்கூடியதாகவும் உள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்ட ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்திற்கு புதிய முகத்தை கொடுத்த கார் கல்லீனன் என சொல்லலாம். ஏனெனில், ஒரு காலத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்றாலே வயதானவர்கள் மட்டுமே வாங்குவார்கள் என்கிற நிலை மாறி, குறைந்த வயதுடையவர்களும் வாங்கக்கூடியதாக மாற்றிய பெருமை கல்லீனன் கார்களையே சேரும். இதன்படி, ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் சராசரி வயது 56இல் இருந்து 43ஆக குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் இந்தியாவில் ஏற்கனவே மாதத்திற்கு 1 அல்லது 2 என விற்பனையாகி கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது கல்லீனன் சீரிஸ்-2 கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாக இது இந்தியாவில் கல்லீனன் கார்கள் விற்பனையை மேலும் அதிகரிக்கும். நம் சென்னையில் உள்ள ஷோரூமில் இந்த புதிய ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை பார்க்கலாம் என்பது உண்மையில் அருமையான விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 21:05 [IST]
English summary
Rolls royce cullinan series 2 launched in india price engine all details here
மேலும்... #rolls royce #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+