இந்த காருல தையலுக்காக 17.7 கிமீ நீளம் அளவுள்ள நூலை பயன்படுத்தி இருக்காங்களா! அம்பானிக்கு பிடிச்ச காராச்சே இது!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), அதன் கோஸ்ட் II (Ghost II) கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது கோஸ்ட் கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ஆகும். முகேஷ் அம்பானியின் பிரியமான சொகுசு கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே சில முக்கியமான மாற்றங்களைச் செய்து தற்போது ரோல்ஸ் ராய்ஸ் அறிமுகம் செய்திருக்கின்றது. வெகு விரைவில் இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அடுத்த ஒரு சில மாதங்களிலேயே இதன் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய டெக்னாலஜிக்களை இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸ் சேர்த்திருக்கின்றது. இத்துடன், புதிய கஸ்டமைசேஷன் வசதியையும் அது வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதுதவிர, இந்த காரின் உள்பக்கத்தில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள் மிகப் பெரிய அளவில் மாற்றப்பட்டு இருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்துக் கொள்ளும் விதமாக கிரே ஸ்டெயின்ட் ஆஷ் (Grey Stained Ash) மற்றும் டூயலிட்டி ட்வில் (Duality Twill) ஆகிய மெட்டீரியல் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றன. மேலும், தோராயமாக இந்த 2 மில்லியன் தையல்கள் போடப்பட்டு இருப்பதாகவும், தையலுக்காக மட்டுமே 17.7 கிமீ நீளம் அளவுள்ள நூல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
இத்துடன், இந்த தையல் வேலைக்கு மட்டும் சுமார் 20 மணி நேரம் செலவிடப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு தனித்துவமான வேலைப்பாடுகள் இந்த காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இது அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் தங்களின் விருப்பத்திற்கு இன்னும் அழகானதாகக் காண்பிக்க உதவியாக இருக்கும்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கும் பெரும்பாலானோர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதன் உட்பக்கத்தை மாற்றியே பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. கோஸ்ட் காரின் டேஷ்போர்டும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது. கிளாஸ் பேனஸ் அதன் மொத்த அகலத்தையும் அலங்கரிக்கும் விதமாக ரோல்ஸ் ராய்ஸ் வழங்கி இருக்கின்றது.
மேலும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கம் செய்தல் மற்றும் உடலின் நிறத்திற்கே அதன் நிறத்தையும் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், வயர்லெஸ் ஹெட்ஃபோனை இணைக்கும் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி சி-டைப் சார்ஜர், 1300W-1400W திறன் கொண்ட ஆம்பிளிஃபையர் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு அட்வான்ஸ்டு பிளானர் சஸ்பென்ஷன் சிஸ்டம் இப்போது விற்பனையில் இருக்கும் கோஸ்ட் காரில் இருந்து அப்படியே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கோஸ்ட்டிலும் கடத்தப்பட்டு இருக்கின்றது. இது பள்ளம்-மேடுகளில் பயணித்தாலும், அந்த காரில் அதில்தான் பயணிக்கின்றது என்கிற உணர்வை வழங்காமல் பயணிகள் பயணிக்க உதவும்.
இத்துடன் வெளிப்புறத்தின் சத்தங்களும் காருக்குள் கேட்காது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமாதிரியான தொழில்நுட்ப மற்றும் கூடுதல் அழகுப்படுத்துதல் ஆகிய வேலைகளே புதிய கோஸ்ட் கார் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை எந்த மாற்றத்தையும் ரோல்ஸ் ராய்ஸ் செய்யவில்லை. 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 563 எச்பி ஆற்றல் அல்லது 592 எச்பி ஆற்றல் என இரு வெவ்வேறு ட்யூன்-அப்பில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் பெரும் பணக்காரர்களின் பிரியமான கார் மடால்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்-ம் ஒன்றாகும். இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கூடுதலா ஈர்க்கும் பொருட்டே இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ரோல்ஸ் ராய்ஸ் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு ரூ. 7 கோடி அல்லது 8 கோடி ரூபாய் என்கிற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








