ஒரே ஒரு யூனிட்டை தயாரிச்சுட்டு சீன் போடுறாங்க!.. சும்மா பளபளன்னு மின்னுதே!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), பேந்தம் எக்ஸ்டென்டட் (Phantom Extended) எனும் சொகுசு கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. ஒரே ஒரு யூனிட்டை மட்டுமே நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. 1964 ஆம் ஆண்டில் வெளியாகிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் 'கோல்டு ஃபிங்கர்' (Goldfinger)-க்கு புகழாரம் சூட்டும் விதமாக இந்த சொகுசு காரை அது தயார் செய்திருக்கின்றது. இந்த படம் வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 60 ஆம் ஆண்டை முன்னிட்டே இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் வெளியீடு செய்துள்ளது.
இந்த காரை 1937 ஆம் ஆண்டில் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய பேந்தம் III செடன்கா டி வில்லே (Rolls Royce Phantom III Sedanca de Ville) கார் மாடலை தழுவியே நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த காரை படத்தில் வந்த வில்லன் ஆரிக் கோல்டு ஃபிங்கர் பயன்படுத்தி இருப்பார் பயன்படுத்தி இருப்பார் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த படத்தில் வில்லன் ஹீரோ-வை போல இந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கும். இதன் அடிப்படையிலேயே படத்தையும், தன்னுடைய 1937 பேந்தம் III செடன்கா டி வில்லே கார் மாடலையும் சிறப்பிக்கின்ற விதமாக ஓர் காரை ரோல்ஸ் ராய்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது.
கவர்ச்சியான தோற்றம் மற்றும் லக்சூரி அம்சம் இரண்டையும் தாங்கியிருக்கக் கூடிய ஓர் கார் மாடலாகவே இந்த பேந்தம் எக்ஸ்டென்டட் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, ஜேம்ஸ் பாண்ட் படத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்து இருப்பது அந்த பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, காரின் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிறமானது கோல்டுஃபிங்கர் பேந்தம் III காரை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. முன்பக்க பம்பரை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கருப்பு நிறம் அப்படியே கிரில்லையும் முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றது. தொடர்ந்து இது அப்படியே நீண்டு பான்னெட் மேற்கூரை, கண்ணாடி பிள்ளர்கள் மற்றும் பின் பக்கம் முழுவதும் இதே கருப்பு நிறமே இடம் பெற்றிருக்கின்றது.
அதேநேரத்தில் பக்கவாட்டு பகுதிகளில் லேசான மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வலது இடது என இரு பக்கங்களிலும் இந்த இடம் பெற்று உள்ளது. அதுதவிர, முன் மற்றும் பின் பக்கத்தின் இரு முனைகளையும் இந்த நிறம் ஆக்கிரமித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இத்துடன், இந்த காரின் அழகிய தோற்றத்திற்காக 21 அங்குல வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி சின்னம் 18 கோல்டு தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கோல்டு ஃபிங்கர் காரின் பல பாகங்கள் 18 மற்றும் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த காரின் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி மட்டுமல்ல முன் மற்றும் பின் பக்கத்தில் உள்ள சென்டர் கன்சோலும் தங்க நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, குளோவ்பாக்ஸ் போன்ற முக்கிய பகுதிகளிலும் தங்கம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இத்துடன், 007 என்கிற எண்களும் காரின் சில முக்கிய பகுதிகளில் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஓர் வாகனமாகவே ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் எக்ஸ்டென்டட் சொகுசு காரை தயாரித்து இருக்கின்றது. இது எப்போது விற்பனைக்கு வழங்கப்படும்? எவ்வளவு ரூபாய் இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் நிர்ணயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் எக்ஸ்டென்டட் ஒரே ஒரு யூனிட் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், அது தரமான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. இந்த காரின் பெரும்பாலான பாகங்கள் கைகளாலேயே தயார் செய்யப்பட்டவை என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும் ஒரே ஒரு யூனிட்டை மட்டுமே பேந்தம் எக்ஸ்டென்டட் கார் மாடலை ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்திருப்பதால் இந்த கார் யாருக்கு விற்கப்படுமோ என்கிற எதிர்பார்ப்பே தற்போது அதிகரித்துள்ளது. மேலும், எவ்வளவு ரூபாய்க்கு அது விற்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









