இந்த கார வாங்க அம்பானியே வரிசைல நிக்க போறாரு! ஆனா அதுக்கு முன்னாடியே தமிழ்நாட்டுக்காரர் ஒருத்தர் வாங்கீட்டாரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு களமிறக்கி கொண்டுள்ளன. இந்த பட்டியலில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.

ஆம், இந்திய சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இன்று (ஜனவரி 19) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் (Rolls Royce Spectre) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதன் விலை 7.50 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Rolls Royce Spectre EV Launched In India

இத்தனைக்கும் இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். வரும் 2030ம் ஆண்டின் இறுதிக்குள் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதற்படியாக தற்போது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் பகுதியில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, ஸ்பிரிட் ஆஃப் எக்டஸி (Spirit Of Ecstasy), ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் 21 இன்ச் அளவுடைய ஏரோ டிசைன் அலாய் வீல்கள் போன்றவை கவனம் ஈர்க்கின்றன.

Rolls Royce Spectre EV

வசதிகளை (Features) பொறுத்தவரையில், வயர்லெஸ் மொபைல் கனெக்ட்டிவிட்டி உடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல்-டோன் ப்ரீமியம் இன்டீரியர் என பல்வேறு அம்சங்களை அடுக்கி கொண்டே போகலாம். இந்த எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளவும் முடியும்.

ரோல்ஸ் ராய்ஸ் 3.0 பிளாட்பார்ம் (Rolls Royce 3.0 Platform) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரில், 102kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 530 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 195kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 34 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரின் எடை 2,890 கிலோ ஆகும். கிட்டத்தட்ட 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருந்தாலும் கூட, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த எலெக்ட்ரிக் கார், வெறும் 4.5 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் (Baashyaam Constructions) நிறுவனத்தின் பாஷ்யம் யுவராஜ் (Baashyaam Yuvaraj), ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரை வாங்கி விட்டார். அவரது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சென்னை சாலைகளில் வலம் வந்த வைரல் வீடியோக்களை (Viral Videos) நாங்கள் ஏற்கனவே உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani) போன்ற தொழில் அதிபர்கள் (Businessman) மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரை வாங்க படையெடுப்பார்கள் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 19, 2024, 18:03 [IST]
English summary
Rolls royce spectre ev launched in india price range features all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+