சொத்தையெல்லாம் வித்தா கூட இந்த காரை வாங்க முடியாது! ஜன 19ம் தேதி வரப்போகும் காஸ்ட்லியான கார்!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 19ஆம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. ஏற்கனவே இந்த கார் இந்தியாவிற்கு வந்துவிட்ட நிலையில் தற்போது தான் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளில் இயங்கும் வாகனங்களை விட்டுவிட்டு எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றன. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என தெரிய வருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற கார்கள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருவதால் உலகம் முழுவதும் உள்ள அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்கப்படுத்தி வருகிறது.

rolls royce spectre india launch

இதனால் வாகனத்தை தயாரிப்பு நிறுவனங்கள் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில் உலகில் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் தனது முதல் எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக ஸ்பெக்டர் என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கார் அறிமுகமானது முதலே உலக பணக்காரர்கள் மத்தியில இந்த காரை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் சென்னையை சேர்ந்த ஒருவர் இந்த காரை இந்தியாவில் உள்ள கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாவதற்கு முன்னரே வெளிநாட்டில் வாங்கி இறக்குமதி செய்துவிட்டார். இந்த கார் சென்னை சாலைகளில் இயங்குவதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.

rolls royce spectre india launch

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த காரை வரும் 19ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த காரில் வழக்கமான தனது வீட்டு இன்ஜினை பயன்படுத்தி தயாரிக்கவில்லை. மாறாக எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி தயாரித்துள்ளது. இந்த காரில் மொத்தம் நான்கு விதமான எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன ஒவ்வொரு வீலுக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த காருக்கு 430 கிலோ வாட் பவர் கிடைக்கிறது. இதன் மூலம் இந்த கார் 900 என்எம் டார்க் திறனில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடியில் எட்டிப் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு தடவை சார்ஜ் போட்டால் 520 கிலோமீட்டர் வரை ரேஞ்ஜ் தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

rolls royce spectre india launch

இதற்காக இந்த எலெக்ட்ரிக் காரில் 102 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. காரின் முன் பக்கம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வழக்கமான கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக ஸ்பிலிட் ஹெட் லைட் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக பேட்யான்களில் 22 எல்இடிக்களுடன் இது ஒரு எலெக்ட்ரிக் ரோல்ஸ் ராய்ஸ் கார் என்பதை பிரதிபலிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பிரிட் ஆஃப் எஸ்டெஸி வடிவத்தை எலெக்ட்ரிக் காருக்காக மாற்றி அமைத்துள்ளனர். அதன் இறகு பகுதி எல்லாம் ஏரோடைனமிக் முறையில் குறுகலான வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் 0.22 சிடி அளவில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் ஏரோ டயனமிக் வகையில் இந்த காரை மாற்றுவதற்காக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

rolls royce spectre india launch

இந்த காரில் 23 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பெரிய பாடி பேனல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரோல்ஸ் ராய்ஸ் காரில் இல்லாத வகையில் ஏ பில்லர் முதல் பின்பக்கம் பேக்கேஜ் கம்பார்ட்மென்ட் வரை ஒரே பேனலாக வழங்கப்பட்டுள்ளது. இதன் லைட் ஜுவல் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இது கலர் இல்லாமல் நியூட்ராலிட்டியை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கலரை வாடிக்கையாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

உட்புறம் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆப்ஷன்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்பக்க சீட்டுகள் முன்பக்க சீட்டுகள் பிரிட்டிஷ் டைலரிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது காரிலுள்ள சீட்டுகளின் தையல்கள் எம்பிராய்டரி, எம்பிராய்டரி பைப்பிங் எல்லாம் டிசைனிலேயே மிகத்துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஸ்டார் லைட் டோர் ஆப்ஷன் உள்ளது. இதில் மொத்தம் 4796 லுமினேட்டட் ஸ்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் வரலாற்றிலேயே இந்த கார்கள் பொருத்தப்பட்ட கார் இது தான்.

rolls royce spectre india launch

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 2975 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.5453 மில்லி மீட்டர் நீளமும், 2080 மிமீ அகலமும், 1559 மிமீ உயரமும் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை ரூபாய் 7 முதல் 9 கோடி என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்காரர்களே இந்த ரோல்ஸ்ராய்ஸ் எலெக்ட்ரிக் காரை வாங்க சற்று தயக்கம் காட்டுவார்கள். அப்படி இருந்தும் சென்னையை சேர்ந்த ஒருவர் இந்த காரை சொந்தமாக வாங்க உள்ளார். இனி பலர் இந்த காரை வாங்க முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது பலருக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 14, 2024, 14:23 [IST]
English summary
Rolls royce spectre india launch january 19
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X