சோழர்காலத்து சிலைகளின் அழகையே இந்த காரு தூக்கி சாப்பிட்ரும் போலையே! 120யூனிட்டை மட்டுமே ரெடி பண்ணியிருக்காங்க!
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளில் ஒன்றாக கோஸ்ட் (Ghost) இருக்கின்றது. இந்த கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட ஓர் சிறப்பு பதிப்பையே அந்நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. அந்த கார் கோஸ்ட் ப்ரிஸ்ம் (Ghost Prism) எனும் பெயரிலேயே வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.
மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த காரை விற்பனைச் செய்யப்போவதாக ரோல்ஸ் ராய்ஸ் நிர்வாகம் அறிவித்து இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி அந்நிறுவனம் 120 யூனிட்டுகள் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிஸ்ம்-ஐ மட்டுமே விற்பனைச் செய்யும் என்பது தெரிய வந்து உள்ளது.

நிறுவனத்தின் 120 ஆண்டு கால வரலாற்றை சிறப்பிக்கும் விதமாகவே கோஸ்ட் ப்ரிஸ்ம் மாடலை ரோல்ஸ் ராய்ஸ் தயார் செய்திருக்கின்றது. மேலும், இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வருவதனாலேயே 120 யூனிட்டுகளை மட்டும் அது விற்பனைக்காக தயார் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.
வழக்கமான கோஸ்ட் கார் மாடலைக் காட்டிலும் மிக அதிக சிறப்புகளைத் தாங்கியதாக கோஸ்ட் ப்ரிஸ்ம் இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. புதிய வண்ணப் பூச்சு, அதிக அலங்கார வேலைப்பாடுகள் என பல சிறப்புகளையே அது தாங்கி இருக்கும். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்ட நிற தேர்வில் இந்த காரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, இன்னும் சில தனிப்பயனாக்கம் செய்யும் வசதியையும் ப்ரிஸ்மிற்கு ரோல்ஸ் ராய்ஸ் வழங்கி இருக்கின்றது. நான்கு தீம்களின்கீழ் அதை தனிப்பயனாக்கம் செய்துக் கொள்ள முடியும். ஃபீனிக்ஸ் ரெட், டர்சீஸ், மண்டரின் மற்றும் ஃபோர்ஜ் யெல்லோ ஆகியவையே அவை ஆகும். இந்த தீம்-ஐ பிரேக் காலிபர், அடிப்பக்க பம்பர் மற்றும் காருக்குள் இருக்கும் லைன்கள் ஆகியவற்றில் நம்மால் காண முடியும்.
தற்போது வெளியீட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்ட கோஸ்ட் ப்ரிஸ்ம் கன்மெட்டல் கிரே மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் தீமால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. கன்மெட்டல் கிரே காரின் வெளிப்புறம் முழுக்கவும் அலங்கரித்திருக்கின்ற நிலையில், அந்த பிரத்யேக நிறமான ஃபீனிக்ஸ் ரெட் தீம் ஸ்டியரிங் வீல், டேஷ்போர்டு லைன், கதவின் சைடு பேனல், இருக்கை லைன், இருக்கைகளில் உள்ள ஆர்ஆர் எழுத்து உள்ளிட்டவற்றிற்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 16 மணி நேரம் மனித கைகளாலேயே பாலிஷ் செய்திருப்பதாகவும் ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து இருக்கின்றது. இத்துடன் காரின் கேபினில் ஸ்டார்லைட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. 1040 வண்ண ஸ்டார் லைட்டுகள் உட்பக்க மேற்கூரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், இதன் க்ரோம் கிரில் மற்றும் பின் பக்கம் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவத்தை வழங்கி அழகுப்படுத்தி இருக்கின்றது. 4 லேயர் பெயிண்ட் பூச்சு செய்யப்பட்டு இருக்கின்றது. அவை மெஷினால் செய்யப்பட்டவை அல்ல. மனித கைகளால் செய்யப்பட்டவை ஆகும். இந்த நிறத்தை பர்ன்-அவுட் (Burnout) என நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இதை அடுத்து முன் பக்க பம்பர் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றிற்கு மின்னும் கருப்பு நிறத்தை வழங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கியதாகவே கோஸ்ட் ப்ரிஸ்ம் இருக்கின்றது. எனவே விலையிலும் வழக்கமான கோஸ்ட்-ஐக் காட்டிலும் மிக அதிக விலைக் கொண்டதாக கோஸ்ட் ப்ரிஸ்ம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் விற்பனைச் செய்யவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிஸ்ம் கார் மாடலின் 120 யூனிட்டுகளை தயார் செய்திருக்கின்றது. இதற்கு அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் மத்தியில் மிகப் பெரிய டிமாண்ட் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த கார் எப்படி? எப்போது? விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications









