ஒரு ஹெட்லைட்டோட விலை 30ஆயிரம் ரூபாவா.. நல்லவேள அது இருந்ததால தப்பிச்சுட்டாரு! இலவசமாவே மாத்தி கொடுத்துட்டாங்க!
வாகன பராமரிப்பு என வந்துவிட்டால் அது பெரும்பாலும் எதிர்பாராத செலவுகளையும், உத்தரவாதச் சிக்கல்களையும் முன்வைக்கும். அந்தவகையிலேயே, காஷிஷ் எனும் நபர் அவருடைய ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) காரை சர்வீஸ் விட்டபோது சில சிக்கல்களைச் சந்தித்து இருக்கின்றார். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
வாங்கி ஓரிரு ஆண்டுகளே ஆன நிலையில் காஷிஷ்-இன் ஸ்கோடா குஷாக் காரின் ஸ்டீயரிங் ரேக்/ கியர் (Steering rack/ gear)-ல் இரைச்சல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக, வளைவுகள் மற்றும் ஏற்றம்-இறக்கங்களில் அதிகப்படியான இரைச்சல் அதில் இருந்து வெளியாகி இருக்கின்றது. இதை சரி செய்யும்படி தன்னுடைய 3 ஆண்டு/ 45000 கிமீட்டருக்கான சர்வீஸின்போது காஷிஷ் சர்வீஸ் நிர்வாகத்திடம் கூறி இருக்கின்றார்.

Source: Team BHP அப்போதே காஷிஷ் சில சிக்கல்களைச் சந்தித்து இருக்கின்றார். பழுது இருப்பது கண்டறியப்பட்டு அந்த பாகத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் சர்வீஸ் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. ஆனால், ஆர்டர் போட்ட மாற்று பாகம் வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
2024 ஜனவரி மாதத்தில் போடப்பட்ட ஆர்டர் பிப்ரவரி மாத்தின் இறுதியிலேயே வந்தடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கிடையில் காஷிஷ்-இன் காரை கவனித்து வந்த சர்வீஸ் மேன் வேறு இடத்திற்கு மாறியிருக்கின்றார். புதிய சர்வீஸ் நபர் காஷிஷ்-இன் பாகத்தை மாற்ற வேண்டும் என்கிற தகவலை அறிந்திருக்கவில்லை.

இதன் விளைவாக கூடுதல் தாமதத்தை அவர் சந்திக்க நேரிட்டதாக தெரிகின்றது. இருப்பினும், இறுதியாக ஸ்டியரிங் ரேக்/ கியர் வெற்றிகரமாக மாற்றப்பட்டது. முன்பு காரை ஓட்டும் போது இருந்த சிக்கல்கள் பல தற்போது தீர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளையில், காஷிஷ் ஸ்டியரிங் ரேக்/ கியரில் மட்டுமல்ல மற்றுமொரு சிக்கலையும் இந்த காரில் அவர் சந்தித்து இருக்கின்றார்.
அது என்னவென்றால் அவருடைய காரில் இருந்த பகல் நேரத்தில் ஒளிரும் லைட் (DRL)-கள் மஞ்சள் நிறத்திற்கு மாற தொடங்கி இருக்கின்றன. இதையும் சரி செய்யும்படி அவர் சர்வீஸ் செய்யும்போது கூறியிருந்தார். இந்த காரின் பகல்நேர மின்விளக்கு ஹெட்லைட்டுடன் இணைந்திருந்த காரணத்தினால் இரண்டையும் சேர்த்து மாற்ற வேண்டும் என சர்வீஸ் நிர்வாகம் தெரிவித்தது.

ஆகையால், இதற்கான ஆர்டரும் போடப்பட்டு அந்த ஹெட்லைட்டும் அவருக்காக வரவைக்கப்பட்டு இருந்தது. இரண்டு பக்கங்களிலும் இருந்த லைட்டுகளும் மஞ்சள் நிறமாக மாறி இருப்பதாக காஷிஷ் கூறியநிலையில் ஒரு பக்கத்தில் மட்டுமே மஞ்சள் நிறம் இருப்பதாக கூறி சர்வீஸ் நிர்வாகம் அந்த ஒரு பக்க லைட்டை மட்டும் மாற்றியது.
ஒரே ஒரு பக்கத்திற்கான ஹெட்லைட்டின் விலை மட்டும் ரூ. 28,653 என தெரிகின்றது. ஹெட்லைட் அடங்கிய பெட்டியில் இந்த விலையே பொறிக்கப்பட்டு இருந்தன. இதேபோல், ஸ்டியரிங் ரேக்/ கியரின் விலை ரூ. 13,290 ஆகும். இத்தகைய அதிக விலைக் கொண்ட உதிரி பாகங்கள் அனைத்தையும் சர்வீஸ் நிர்வாகம் வாரண்டி திட்டத்தின்கீழே மாற்றி இருக்கின்றது.

அதாவது, மாற்றப்பட்ட அதிக விலைக் கொண்ட இரண்டு பாகத்திற்கும் பணம் வாங்கப்படவில்லை. நீண்ட நாட்களாக காத்திருந்ததற்கு கிடைத்த ஓர் பலனாக பழுதப்பட்ட பாகங்கள் வாரண்டி திட்டத்தின்கீழ் மாற்றப்பட்டது அமைந்தது. ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இந்தியாவில் இரண்டு விதமான பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
1.0 லிட்டர், 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும். இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதேபோல், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இந்த கார் அதிக தொழில்நுட்ப வசதிகளை தாங்கியக் காராகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 10 அங்குல அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, காற்றோட்டத்தை வழங்கும் வசதிக் கொண்ட இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜர், மற்றும் மிர்ரர் லிங்க், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல் இந்த கார் பாதுகாப்பு அம்சங்கள் விஷயத்திலும் பெஸ்ட்டானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 6 ஏர்பேக்கு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர் இருக்கைக்கான மவுண்டுகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன் வசதி, எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் பிரீமியம் அம்சங்கள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாக குஷாக் காட்சியளிக்கின்றது. இந்த காரின் பாகங்களையே வாரண்டி திட்டத்தின்கீழ் பைசா செலவில்லாமல் மாற்றி இருக்கின்றார். பொதுவாக வாரண்டியை கிளைம் செய்யவே பலர் பெரும் சிக்கலை சந்திப்பர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இங்கு அது நடக்கவில்லை.


Click it and Unblock the Notifications









