எதிர்காலத்துல கார்கள் இப்ப இருக்க மாதிரி இருக்காது போலையே! இந்த காருல படுத்துக்கிட்டே போகலாம்!!

எதிர்காலத்தில் வாகனங்கள், மிக முக்கியமாக கார்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. இன்றைய நவீன காலகட்டத்தில் ஒரு சிலர் தங்களுடைய கார்களையே நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, காரையே மினி வீடாக அல்லது கேம்ப் செய்யும் வாகன மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய கலாச்சாரம் உலக அளவில் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டே உலக புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று தன்னுடைய புதிய தயாரிப்பை வடிவமைத்திருக்கின்றது. அந்த தயாரிப்பு (வாகனம்) மிகப் பெரிய மோட்டார்சைக்கிளைப் போன்றுக் காட்சியளிக்கின்றது. ஆனால், அது மோட்டார்சைக்கிள் அல்ல. அதேவேளையில், அது காரும் அல்ல.

Schlafmobil swift pod autonomes ev concept

இந்த இரண்டில் மட்டுமல்ல வேறு எந்த வகை வாகனத்தில் சேராத புதிய அவதாரம் கொண்ட வாகனமே அது ஆகும். ஸ்கலாஃப்மொபைல் (Schlafmobil) எனும் நிறுவனம் இந்த புதிய அவதாரத்திலான வாகனத்தைத் தயாரித்த நிறுவனம் ஆகும். அந்த வாகனத்திற்கு நிறுவனம் ஸ்விஃப்ட் பாட் எனும் பெயரைச் சூட்டி இருக்கின்றது.

இது ஓர் தானியங்கி (Autonomous) வசதிக் கொண்ட வாகனம் ஆகும். தொடர்ந்து, ஓர் நட்சத்திர விடுதிக்கு இணையான வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. தூங்கிக் கொள்ள மற்றும் படுத்துக் கொள்ள ஏதுவாக சோஃபா போன்ற இருக்கை சற்று நீளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

Schlafmobil swift pod interior

முக்கோணம் அமைப்பைக் கொண்டிருக்கும் ஸ்விஃப்ட் பாட் (Swift Pod) வாகனத்தின் இரண்டு பக்கத்திலும் சோஃபா போன்ற மெத்தைகளும், மற்றொரு பக்கத்தில் இரண்டு இருக்கைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே இருவர் படுத்துக் கொண்டும், இரண்டு பேர் அமர்ந்துக் கொண்டும் இந்த வாகனத்தில் பயணித்துக் கொள்ள முடியும்.

மேலும், இது ஓர் தானாக இயங்கும் வாகனம் என்பதால் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் கன்ட்ரோல்கள் எதுவும் இந்த வாகனத்தில் இடம் பெற முடியவில்லை. மிக முக்கியமான அம்சங்களான ஸ்டியரிங் வீல், பிரேக், ஆக்சலரேஷன், கிளட்ச் மற்றும் கியர் லிவர் என எதையும் வாகனத்தின் உட்பக்கத்தில் பார்க்க முடியவில்லை.

Schlafmobil swift pod autonomes ev side view

எனவே முழுக்க முழுக்க மனித தலையீடு இன்றி தன்னாட்சி தொழில்நுட்பத்தில் மட்டுமே இந்த வாகனம் இயங்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் பல இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கிற்கான பெரிய திரை, குளிர்சாதன பெட்டி மற்றும் ஸ்நாக்ஸ்களை சூடாக பத்திரப்படுத்தி வைக்கும் பெட்டி, படிப்பதற்கான ரீடிங் லைட் என வீட்டில் இருக்கும் அனுபவத்தை வழங்கும் பிரத்யேக அம்சங்கள் பல இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கும். அத்துடன், ஸ்விஃப்ட் பாட் முழுக்க முழுக்க மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் என கூறப்படுகின்றது.

ஆனால், இது ஓர் முழு சார்ஜில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும், என்ன மாதிரியான பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது மற்றும் என்ன வேகத்தில் இது இயங்கும் என்பது போன்ற எந்த முக்கிய தகவல்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. மேலும், ஸ்விஃப்ட் பாட் இப்போது வெறும் கான்செப்ட் (முன் மாதிரி) மாடலாக மட்டுமே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கலாஃப்மொபைல் இந்த வாகனத்தை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற தகவல்கள் வெலியாகவில்லை. மேலும், நிறுவனம் இதை எப்போது உற்பத்தி செய்யும் என்பது பற்றிய தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த வாகனம் நம்ம ஊரில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்விஃப்ட் காரை போலவே பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இதேபோல் அது விற்பனைக்கு வரும் என்றாலும் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 23:37 [IST]
English summary
Schlafmobil swift pod autonomes ev concept
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X