மாருதி சுஸுகிக்கு எங்கிருந்துதான் கஸ்டமர்ஸ் கிடைக்கிறாங்க? யாராலும் விற்க முடியாத காரையும் அசால்ட்டா விற்குது!

இந்திய மார்க்கெட்டில் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றியும், அவை கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கைகள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் செடான் கார்களை வாங்குவோர் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைக்கு சிறப்பாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் செடான் கார் என்று பார்த்தால், அது மாருதி சுஸுகி டிசைர் ஆகும். சந்தையில் பிரபலமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்சனாக இது விளங்குகிறது.

sedan cars sales in january

கடந்த 2024 ஜனவரி மாதத்தில் மொத்தம் 16,773 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஜனவரியில் வெறும் 11,317 டிசைர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, டிசைர் கார்கள் விற்பனை ஆனது 48.21% அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்திலும் 14,012 டிசைர் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

ஏற்கனவே கூறியதுபோல், அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய ஒரேயொரு செடான் ரக காராக டிசைர் விளங்குகிறது. ஏனெனில், இதற்கடுத்து 2வது இடத்தில் உள்ள ஹூண்டாயின் அவ்ரா செடான் கார் டிசைரை காட்டிலும் மிக பெரிய இடைவெளி உடன் உள்ளது. ஏனெனில், அவ்ரா கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 5,516 ஆகும். இதுவாவது பரவாயில்லை, 2023 ஜனவரி மாதத்தில் வெறும் 4,634 அவ்ரா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது.

sedan cars sales in january

3வது இடத்தில் உள்ள ஹோண்டா அமேஸ் செடான் காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் வெகுவாக குறைந்து வருகிறது. 2023 ஜனவரியில் 5,580 யூனிட்கள் விற்கப்பட்டு இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்திருந்த அமேஸ் கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 2,972 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் ஹோண்டா அமேஸ் கார்களின் விற்பனை ஆனது 46.74% குறைந்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான செடான் காரான வெர்னா இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் விற்கப்பட்ட வெர்னா கார்களின் எண்ணிக்கை ஆனது 2,172 ஆகும். 2023 ஜனவரியில் ஆயிரம் வெர்னா கார்கள் கூட விற்பனையாகவில்லை. இந்த வகையில், இந்த 2024 ஜனவரியில் சுமார் 118.29% அதிக எண்ணிக்கையில் வெர்னா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

sedan cars sales in january

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் ஃபோக்ஸ்வேகனின் விர்டுஸ் கார் 1,879 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 ஜனவரியில் விற்கப்பட்ட விர்டுஸ் கார்களின் எண்ணிக்கை 1,379 ஆகும். 6வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் டிகோர் மாடல் உள்ளது. டிகோர் செடான் கார்கள் பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் ஆப்ஷனிலும் கிடைக்கின்றன. இவை மொத்தமாக கடந்த மாதத்தில் 1,539 டிகோர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2023 ஜனவரி மாதத்தில் 3,106 டிகோர் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வரிசையில், 7வது மற்றும் 8வது இடங்களை ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள் பிடித்துள்ளன. இவை இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,242 மற்றும் 1,123 ஆகும். இந்த லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் மாருதி சுஸுகி சியாஸ் (363) மற்றும் டொயோட்டா காம்ரி (312) செடான் கார்கள் உள்ளன.

sedan cars sales in january

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார்களினால் செடான் கார்களின் விற்பனை குறைந்து கொண்டு வருகிறது என்றாலும், இதிலிலும் மாதத்திற்கு சுமார் 16 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகக்கூடிய அளவிற்கு ஒரு செடான் கார் மாடலை மாருதி சுஸுகி கொண்டுள்ளது. இதனால்தான், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. இந்தியாவில் ஓரளவிற்கு சுமாராக விற்பனையாகக்கூடிய ஒரேயொரு ஹோண்டா காரான அமேஸின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2024, 12:33 [IST]
English summary
Sedan cars sales in 2024 january top 10 models here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X