பிளக் பாயிண்ட்டை தேடினு இருக்க தேவையில்ல!! வாழை பழத்தை உறிச்சி கொடுக்கும் அளவுக்கு சிம்பிள் ஆனது இது!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை காட்டிலும், அவற்றை சார்ஜ் செய்வதுதான் பெரிய பிரச்சனையாக மாறிவரும் நிலையில், ஐஐடி கான்பூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று இதற்கான எளிய தீர்வு ஒன்றை கண்டுப்பிடித்துள்ளது. எந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அது? எந்த மாதிரியான தொழிற்நுட்பத்தை இந்த நிறுவனம் கண்டுப்பிடித்துள்ளது என்பதை இனி பார்க்கலாம்.

சிமக்ட்ரிக்கல்ஸ் (Simactricals), ஐஐடி கான்பூர் தொழிற்நுட்ப மையத்தில் செயல்பட்டுவரும் ஸ்டார்ட்-அப் நிறுவனம். எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வயர்லெஸ் சார்ஜர் சிஸ்டத்தை உருவாக்கும் பணியில் சமீப காலமாக ஈடுப்பட்டுவந்த சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் தற்போது அந்த தொழிற்நுட்பத்தை வெற்றிக்கரமாக உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

simactricals wireless ev charging system

2020 அக்டோபர் மாதத்தில் நிறுவப்பட்ட சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் சமீபத்தில் ரூ.75 லட்சம் முதலீடுகளை சஞ்சிகனெக்ட் ப்ரீ-சீடு கோஹார்ட் திட்டத்தின் மூலமாக ஈட்டியுள்ளது. இது இல்லாமல், அரசாங்கத்தின் மூலமாக தனியாக ரூ.44 லட்சம் முதலீடுகளையும் சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் ஈட்டியுள்ளது. சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தை பல்வேறு விதமான எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தலாம்.

அதாவது, எலக்ட்ரிக் 2-வீலர்கள், 3-வீலர்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு மட்டுமின்றி, வார்ஹவுஸ் ரோபோட்கள், ரோவர்கள் மற்றும் ட்ரோன்களுக்கும் பயன்படுத்தலாம். இந்த வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தை வெறும் 45 நாட்களுக்குள் சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஆனால் ஆரம்பத்தில், நாட்டின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை சார்ஜ் செய்யவே இந்த தொழிற்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் சிமக்ட்ரிக்கல்ஸ் இறங்கியது.

simactricals wireless ev charging system

இதற்காக சார்ஜிங் பேட்களை உருவாக்கிய சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், அந்த சார்ஜிங் பேட்களில் ட்ரோன்கள் தரையிறங்கினால் தானாக சார்ஜ் ஆகும் வகையில் இந்த வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் வடிவமைத்தது. இந்த கண்டுப்பிடிப்புக்கு ஐஐடி கான்பூர் தொழிற்நுட்ப மையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இதனை மற்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

இதுகுறித்து சிமக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான மிஹிர் மிஷ்ரா கூறுகையில், "புதுமைக்கான ஆர்வம் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் அனுபவத்தை எளிதாக்குவதற்கான அர்பணிப்பில் சிமக்ட்ரிக்கல்ஸ் இயங்குகிறது. எங்களின் வயர்லெஸ் சார்ஜிங் தொழிற்நுட்பம், வசதி மற்றும் செயல்திறனில் ஒரு முன்னேற்றத்தை இது பிரதிபலிக்கிறது.

simactricals wireless ev charging system

இது எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு சார்ஜ் வழங்குவதை முன்பை விட எளிதாக்குகிறது. எலக்ட்ரிக் வாகன தொழிற்துறையில் சாத்தியமானவற்றின் லிமிட்களை தொடர்ந்து விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார். சஞ்சிகனெக்ட்டின் சிஇஓ சுனில் ஷேகாவாட் கூறுகையில், "சஞ்சிகனெக்ட்டில் நிலையான தொழிற்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் சிமக்ட்ரிக்கல்ஸ் போன்ற ஹார்டுவேர் தொழிற்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

சிமக்ட்ரிக்கல்ஸின் வயர்லெஸ் இவி சார்ஜிங் சிஸ்டம் சுற்றுச்சூழலை வளர்ப்பதற்கும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எங்களில் நோக்கத்துடன் சரியாக ஒத்துப் போகிறது" என்றார். தங்களது வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை விளக்கி கூற இந்தியாவில் செயல்படும் 2-வீலர் மற்றும் 3-வீலர் நிறுவனங்களை அணுக சிமக்ட்ரிக்கல்ஸ் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எலக்ட்ரிக் வாகனங்களை விரைவாக சார்ஜ் செய்வதற்கான தொழிற்நுட்பத்திற்கான தேவை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, சிமக்ட்ரிக்கல்ஸ் போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இருந்து பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் வரையில் பல்வேறு முயற்சிகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எதற்கும் ஒரு சரியான தீர்வு கிடைத்தது போன்று தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 11:55 [IST]
English summary
Simactricals wireless electric vehicle charging system check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X