சீனாவிற்காக தயார் செய்த பிளாட்பாரத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கு காரை ரெடி பண்ண போறாங்க! 30சதவீதம் விலை குறைவா!
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவமான ஸ்கோட ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India Pvt Ltd), நாட்டில் சீக்கிரமே ஓர் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு சான்றாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி இவர்களின் ஆதிக்கமே எலெக்ட்ரிக் கார் பிரிவில் கோளோச்சி உள்ளது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கம்மி விலை மின்சார காரை விற்பனைக்குக் கொண்டு வந்து அவர்களுக்கு டஃப் கொடுக்க இருக்கின்றது. மேலும், இந்த காரை சீன சந்தைக்காக தயார் செய்யப்பட்ட சிஎம்பி 21 (CMP 21) பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயார் செய்ய இருக்கின்றது.

தன்னுடைய சக்கன் கார் உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த வாகனத்தை அது உற்பத்தி செய்ய உள்ளது. முன்னதாக இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.4 (ID.4) மின்சார காரையும், ஸ்கோடா நிறுவனம் என்யாக் (Enyaq) எனும் எலெக்ட்ரிக் காரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.
இதற்கேற்ப என்யாக் கார் மாடல் சோதனையோட்டம் செய்யப்படும் படங்கள் சமீபத்தில் வெளியாகின. ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களால் இந்த கார்கள் இந்தியாவில் இப்போதைக்கு விற்பனைக்கு வரப்போவதில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், அதற்கு பதிலாக புதிய வேறு சில பட்ஜெட் விலை கார்களை இந்தியாவில் அது விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, முன்னதாக மஹிந்திரா நிறுவனத்துடன் அது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது. இந்த நிறுவனத்துடன் சேர்ந்து எம்இபி21 (MEB 21) பிளாட்பாரத்தை பயன்படுத்தி அது எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இருந்தது. ஆனால், இந்த திட்டமும் இப்போது கைவிடப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
போக்ஸ்வேகன்-ஸ்கோடா நிறுவனம் தற்போது கையில் எடுத்து இருக்கும் திட்டமானது அதன் முந்தைய திட்டங்களைவிட மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஆகும். சொல்லப்போனால் எம்இபி 21 பிளாட்பாரத்தைக் காட்டிலும் சிஎம்பி 21 பிளாட்பாரமானது 30 சதவீதம் வரை விலை குறைவானதாக இருக்கும் என தெரிகின்றது.
அதேநேரத்தில், ஃபோக்ஸ்வேகன்-ஸ்கோடா நிறுவனங்களின் மற்ற தயாரிப்புகளைப் போல அவை அதிக பிரீமியம் தர அம்சங்களைத் தாங்கியதாக இருக்கும் இருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன், இந்த பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் காரில் 40 kWh முதல் 80 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இதன் வீல் பேஸ் ஐடி.4 காருக்கு இணையானதாக இருக்கும். எனவே அனைத்திலும் சிறந்த வாகனமாகவே எம்இபி 21 பிளாட்பாரத்தில் தயார் செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் இருக்கும் என தெரிகின்றது. தொடர்ந்து இது நாட்டில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் எனில் இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு அது போட்டியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், எப்போது விற்பனைக்கு வரும் என்கிற துள்ளியமான விபரம் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்களை ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி இந்த எலெக்ட்ரிக் கார் 2027 ஆம் ஆண்டின் மத்திக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய எம்ஜி விண்ட்ஸர் இவி-க்கு மிக சிறப்பான டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதன் வருகையால் தற்போது டாடா நெக்ஸான் இவிக்கு மிகப் பெரிய அளவில் தலைவலி உருவாகி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இந்தியாவின் மின்சார கார் பிரிவை அதகளப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








